விடுதலைவாதம்

From Wikipedia, the free encyclopedia

விடுதலைவாதம்
Remove ads

விடுதலைவாதம் (libertarianism) எனபது சுதந்திரம், தனிப்பட்ட இறையாண்மை, விடுதலை யை முதன்மை மதிப்புகளாகக் கொண்ட ஓர் அரசியல் மெய்யியல் ஆகும்.[1][2][3][4] பல விடுதலைவாதிகள், சுதந்திரம் என்ற கருத்து ஆக்கிரமிப்பு அல்லாத கொள்கைக்கு இணங்க உள்ளது என்று நம்புகிறார்கள், அதன்படி ஒவ்வொரு தனிநபருக்கும், அவர்கள் மற்றவர்களுக்கு எதிராக பலவந்தமாகவோ அல்லது மோசடியாகவோ செயல்படுவதன் மூலம் அவர்களின் உரிமைகளை மீறாத வரை, அவர்கள் விரும்பும் வழியில் வாழ உரிமை உண்டு.[5]

Thumb
நியூயார்க் நகரத்தில் ஒரு விடுதலைவாதக் கம்யூனிச வெளியீடான Le Libertaire, Journal du mouvement social இன் 1860 ஆகத்து 17 பதிப்பு

விடுதலைவாதிகள் தனிநபர் தன்னாட்சி, அரசியல் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை விரிவுபடுத்துவதை ஆதரிக்கின்றனர், சட்டத்தின் முன் சமத்துவத்தையும், குடிசார், அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை வலியுறுத்துகின்றனர், இதில் குழுமச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் ஆகியவை அடங்கும்.[4][6] விடுதலைவாதிகள் பொதுவாகத் தனிப்பட்ட விடுதலையை ஆதரிக்கிறார்கள், அதேவேளை அதிகாரம், அரசு அதிகாரம், போர், இராணுவவாதம், தேசியவாதத்தை எதிர்க்கிறார்கள், ஆனால் சில விடுதலைவாதிகள் தற்போதுள்ள பொருளாதார, அரசாட்சி முறைமைகளுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பின் நோக்கம் மற்றும் தன்மையில் வேறுபடுகிறார்கள்.

அரசு, அரசு சாரா அதிகாரத்தின் சட்டபூர்வமான செயல்பாடுகள் குறித்து விடுதலைவாத சிந்தனைப் பள்ளிகள் பலவிதமான கருத்துக்களை வழங்குகின்றன. விடுதலைவாதத்தின் இந்த பல்வேறு வடிவங்களை வேறுபடுத்துவதற்கு வெவ்வேறு வகைப்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[7][8] சொத்து, மூலதனம் ஆகியவற்றின் தன்மை குறித்த தனித்துவமான விடுதலைவாதக் கண்ணோட்டங்களை அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர், பொதுவாக அவற்றை இடது-வலது அல்லது சோசலிச-முதலாளித்துவ அச்சுகளில் வரையறுத்துள்ளனர்.[9] விடுதலைவாதம் தாராளவாதக் கருத்துகளால் பரவலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[10]

Remove ads

முக்கிய கொள்கைகள்

தனிமனித்தத்துவம், தனிமனித உரிமைகள்

சுதந்திரவாதத்தைப் பொறுத்தவரையில் தனிமனிதத்துவத்தையும், தனிமனித உரிமைகளையும் மிக அடிப்படையான, மிக முக்கியமானதாகக் கருதுகிறது.[11] தனிமனிதர்களே தெரிவுகள் செய்யக் கூடியவர்கள், அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள். பிறரைப் பெளதீக முறையில் பாதிக்காத வகையில் முழுமையான சுதந்திரம் தனிமதர்களுக்கு உண்டு என்கிறது. போதைப் பயன்பாடு, தற்கொலை போன்ற தனக்குப் பாதகமான தெரிவுகளை தனிமனிதர் செய்தாலும் அதற்கு அவருக்கு உரிமை உண்டு என்கிறது.

வலிந்து தாக்காமைக் கொள்கை

வலிந்து தாக்காமைக் கொள்கை (Non-aggression principle) என்பது தனிமனித உரிமைகளின் நீட்சி ஆகும். ஒருவரின் செயற்பாட்டு பிறரைப் பெளதீக நோக்கில் பிறரைப் பாதிக்காத வகையில் அவர் மீதோ, அவரது உடைமைகள் மீதோ தாக்க முடியாது, அத்துமீற முடியாது.[12] ஒருவர் தாக்கப்பட்டால் அற அல்லது ஆயுதப் போராட்ட முறையில் தற்காப்புச் செய்வதை இக் கொள்கை தடுக்கவில்லை. இக் கொள்கை களவு, ஏமாற்றல் போன்ற குற்றங்களையும், பிற நாடுகள் மீது படையெடுப்பதை, ஆக்கிரமிப்பதை, தலையிடுவதையும் குற்றங்களாகத் தடுக்கிறது.

திறந்த சந்தை, தனியார் சொத்துரிமை

சுதந்திரவாதம் திறந்த சந்தையையும், தனியார் சொத்துரிமையையும் முதன்மைப் பொருளாதாரக் கொள்கைகளாக முன்வைக்கிறது. மனிதர்களின் நலம் சிறக்க அவர்கள் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். திறந்த சந்தையே சுதந்திர மனிதர்களுக்கு ஏற்ற, சுதந்திர மனிதர்கள் அவர்களின் தெரிவுகளுக்கு ஏற்ற முறையிலான பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட சிறந்த முறை. இவ்வாறு இவர்களின் உழைப்பின் ஊடாகப் பெறப்படும் உடைமைகளுக்கு இவர்கள் முழு உரித்தும் உடையவர்கள்.

சுதந்திரவாதம் அனைத்து அல்லது அனேக பொருளாதர செயற்பாடுகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று வேண்டுகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ஊடகம், கலைத்துறை, நில மேலாண்மை, வேளாண்மை உட்பட அனேக துறைகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று கருதுகிறது. திறந்த சந்தையே இதை செயற்றிறனுடன் செய்ய முடியும் என்று கூறுகிறது. படைத்துறை, காவல்துறை, நீதித்துறை ஆகிய துறைகளில் மட்டுமே அரசுக்கு ஒரு பங்கு உண்டு என்கிறது. இதனையும் கூட சில தீவர சுதந்திரவாத நிலைப்பாட்டாளர்கள் மறுப்பர்.

வரம்புக்குட்பட்ட அரசு

தனிமனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு வரம்புக்குட்பட்டதாகவும், கட்டுப்படுத்தப்பட்டாதாகவும், அதன் பணிகள் தெளிவாக வரையை செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று சுதந்திரவாதம் கருதுகிறது. அதிகாரம் குவியப்படுத்தப்படுதலையும், அரசு பெரிதாவதையும் சுதந்திரவாதம் விரும்புவதில்லை.[13]

Remove ads

சுதந்திரவாத சிந்தனையாளர்கள்

அமைப்புகள்

நாடுகள் வாரியாக சுதந்திரவாதம்

அமெரிக்காவில் சுதந்திரவாதம்

மேற்கு நாடுகள் பலவற்றில் சுதந்திரவாதம் பரவி இருக்கிறது. இருப்பினும் இது இன்னும் மையநீரோட்ட கொள்கையாக யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவிலேயே இதற்கு பலத்த தார்மீக ஆதரவு இருக்கிறது.

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads