விண்டோசு விஸ்டா

From Wikipedia, the free encyclopedia

விண்டோசு விஸ்டா
Remove ads

விண்டோசு விஸ்டா என்பது மைக்ரோசாப்ட்டின் மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கு பிந்தைய வர்த்தகரீதியாக வெளிவந்த விண்டோஸ் பதிப்பாகும். 22 ஜூன் 2005 இப் பெயரைப் பெறுவதற்கு முன்னர் இது லாங் ஹார்ன் என அறியப் பட்டது.[4]. விண்டோஸ் விஸ்டாவின் விருத்தியானது 8 நவம்பர் 2006 இல் முழுமையடைந்தது. இதை அடுத்துக் கட்டம் கட்டமாகப் வன்பொருள், மென்பொருள் விருத்தியாளர்கள், வணிக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி விஸ்டாவின் வர்த்தகப் பதிப்பு நவம்பர் 2006 இலும் உலகளாவிய ரீதியில் ஜனவரி 30, 2007 இலும் வெளிவந்தது.[5] இந்தப் பதிப்பானது மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் எக்ஸ்பி வெளிவிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்தே வெளிவந்தது. இத்திட்டமானது கணினி வரலாற்றிலேயே மிகப் பெரியதும் மிகப் பணச் செலவானதுமான ஓர் திட்டமாகும் தவிர இதுவே விண்டோஸ் வரலாற்றில் ஓர் சந்ததி இயங்குதளங்களுக்கிடையிலான மிகக்கூடுதலான காலம் எடுத்த இயங்குதளமும் ஆகும். "விஸ்டா" என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த இயங்குதளத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர்.

விரைவான உண்மைகள் விருத்தியாளர், ஓ.எஸ். குடும்பம் ...
Remove ads

மேலோட்டம்

விண்டோஸ் விஸ்டாவானது புதிய பல வசதிகளைக் அறிமுகப் படுத்துகின்றது. ஏரோ(en:Windows Aero) என்றழைக்கப்படும் மேம்படுத்தப் பட்ட படங்களுடனான பயனர் இடைமுகம் (Graphical user interface) மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடற் தொழில் நுட்பம், வீட்டு வலையமைப்பில் கணினிகளிற்கிடையே தொடர்புகளை அதிகரிக்க en:Peer-to-peer தொழில்நுட்பத்தினூடாக கோப்புக்களைப் பகிர்தல் இலகுவாக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்டின் பிரதித் தலைவரும் விஸ்டா விற்குப் பொறுப்பானவருமான ஜிம் ஆல்சின் ஓராயிரத்திற்கு மேற்பபட்ட புதிய வசதிகளும் தொழில் நுட்பங்களும் இதில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பில்கேட்ஸ் 12 ஆண்டுகளிற்கு முன்னர் வெளிவந்த வின்டோஸ் 95 இலிருந்து விண்டோஸ் மேம்படுத்தல் இதுவாகவே இருக்கும் என்றார்.

மைக்ரோசாப்டின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இயங்கு தளங்களின் பாதுகாப்பு இருக்கும். விண்டோஸ் XP இயங்குதளத்தின் முக்கிய குறைகளாக கணினி வைரஸ், கெட்டமென்பொருட்கள், buffer overflows ஆகியவைகளே இருக்கின்றன.

Remove ads

வசதிகள்

தமிழ் உட்பட இந்திய மொழிகளை இதன் முந்தைய பதிப்புப் போன்று கட்டுப்பாட்டுப் பலகத்தினூடாக சிக்கலான சிறுநிரல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இது நேரடி ஆதரவினையும் வழங்குகின்றது. சிங்களம் முதன் முறையாக விண்டோஸ் கணினிகளில் ஒருங்குறி முறையில் விஸ்டாவூடாக ஆதரவளிக்கப்படுகின்றது.

புதிய தேடும் வசதி

வேகமாகத் தேடும் பாளம் (quick search pane) என அழைக்கப்படும் பகுதியில் கேள்விகளை தட்டச்சு செய்து அதனுடன் தொடர்பான கோப்புகளின் பெயர்களைப் பெறலாம். தேடுதலில் கிடைக்கும் முடிவுகளை கோப்புறைகளாக சேமிக்கலாம். தேடுதல் கேள்விகள் எப்போதும் நினைவில் வைக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் கிடைக்கையில் இந்த கோப்புறைகள் புதுப்பிக்கப்படும். எடுத்துக் காட்டாக இளையராஜா என நீங்கள் ஒரு முறை தேடி கோப்புறையை உருவாக்கினால் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அல்லது கம்ப்யூட்டரில் பதிக்கப்படுகையில் அவை அந்த கோப்புறையில் சேர்க்கப்படும்.

சிறு உருவம்

இனி சிறு உருவங்கள் (icon) கோப்பு வகையைக் குறிக்காது. ஒவ்வொரு கோப்பின் உரையைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு வேர்ட் ஆவணத்தின் சிறுஉருவம் முதல் பக்கத்தில் உள்ளதைக் காட்டும் வகையில் இருக்கும். இந்த சிறுஉருவ படங்கள் சிறியனவாக இருந்தாலும் அவை கோப்பில் உள்ள தகவல்களை எடுத்து காட்டும் காட்சிப் படமாக அமையும்.

மடிக்கணினியில் புதுமை

விண்டோஸ் விஸ்டா மடிக்கணினி இயக்கத்திலும் மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. இயங்குதளத்தை இயக்காமல் கூட ஒரு மடிக்கணினி ஏற்கனவே அமைக்கப்பட்ட தகவல்களைக் காட்டும்; இசையை முழங்கும்.

வலையமைப்பில் இணைக்கப்படுகையில் அதனுடன் இணைந்த கணினிகளின் அனைத்து கோப்புகளையும் ஒரு தொகுப்பாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு கணினியில் மட்டுமின்றி இணைந்துள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள இசைக்கோப்புகளையும் ஒரு தொகுப்பில் இணைத்துக் காட்டும்.

Remove ads

பதிப்புக்கள்

விண்டோஸ் விஸ்டா 6 பதிப்புக்களாக வெளிவந்துள்ளது. அவையாவன

  1. விண்டோஸ் விஸ்டா ஸ்டாட்டர் - உலக வங்கியினால் தீர்மானிக்கப்பட்ட வருமானம் குறைந்த நாடுகளுகளில் மாத்திரம் விற்கப்படுவது. - ஏரோ இடைமுகம் கிடையாது.
  2. விண்டோஸ் விஸ்டா ஹோம் பெஸிக் - வீட்டுப்பாவனைக்கான மலிவான பதிப்பு. ஏரோ இடைமுகம் கிடையாது.
  3. விண்டோஸ் விஸ்டா ஹோம் பிறிமியம்
  4. விண்டோஸ் விஸ்டா பிஸ்னஸ்
  5. விண்டோஸ் விஸ்டா எண்டபிறைஸ்
  6. விண்டோஸ் விஸ்டா அல்டிமேட்.
மேலதிகத் தகவல்கள் விண்டோஸ் விஸ்டா ஸ்டாட்டர், விண்டோஸ் விஸ்டா ஹோம் பெஸிக் ...

[6]

வன்பொருட் தேவைகள்

விண்டோஸ் விஸ்டாவை நிறுவக்கூடிய கணினிகள் இரண்டாக வகைப்படுத்தப்படும் அவையாவன விஸ்டாவை நிறுவக்கூடியது, விஸ்ட்டாவிற்குத் தயாரானது.[7] விஸ்டாவின் அடிப்படையான (பேசிக்) இடைமுகமும் மற்றும் விண்டோஸ் சம்பிரதாய (கிளாசிக்)இடைமுகமும் அநேகமாக எல்லா விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களை ஆதரிக்கும் ஒளிஅட்டைகள் (வீடியோ காட்ஸ்) இவற்றையும் ஆதரிக்கும்.

மேலதிகத் தகவல்கள் விஸ்டா இயங்கக்கூடியது, விஸ்டாவிற்குத் தயாரானது ...
Remove ads

மேம்படுத்தல் நிறுவல்கள்

விண்டோஸ் 2000 உம் விண்டோஸ் எக்ஸ்பியுமே விண்டோஸ் விஸ்டாவாக மேம்படுத்தக் கூடியவை. ஏனைய பதிப்புக்களை விண்டோஸ் விஸ்டாவாக மேம்படுத்த இயலாது. எனினும் அக்கணினியானது வன்பொருட் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தால் நேரடியாக புதிய துப்பரவான நிறுவலை மேற்கொள்ளலாம்.[10]

மேலதிகத் தகவல்கள் ஹோம் பேசிக், ஹோம் பிறிமியம் ...
Remove ads

குறைபாடுகள்

விண்டோஸ் விஸ்டா தமிழ் உட்பட பல இந்திய மொழிகளை ஆதரித்தாலும் அவை நேரம் மற்றும் திகதியினைக் காட்டும்போது திகதியின் ஒருபகுதியை மாத்திரமே காட்டும் இப்பிழையானது விண்டோஸ் 2000 காலப் பகுதியில் இருந்தே வழு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இக்குறைபாடானது இற்றைவரை தீர்க்கப்படவில்லை. தவிர விண்டோஸ் விஸ்டாவுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் காலண்டரிலும் இக்குறைபாடுண்டு.

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads