விமல் சொக்கநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விமல் சொக்கநாதன் (Wimal Sockanathan, 30 சூன் 1944 – 1 ஆகத்து 2023) ஒரு வானொலிக் கலைஞரும், ஒலிபரப்பாளரும் ஆவார். ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். இலங்கை வானொலியில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றியவர். இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னர் பிபிசி தமிழோசையில் அறிவிப்பாளராகப் பணியாற்றிய இவரது குரல் உலகத் தமிழ் வானொலிகளில் ஒலித்தது. இவர் சட்டம் படித்து லண்டனில் வழக்கறிஞர் நிறுவனம் நடத்திவந்தார். அறிவிப்பாளரும், லண்டனில் "இசைக்குயில்" போட்டி நிகழ்ச்சி அமைப்பாளருமான யோகா தில்லைநாதன் இவரது உடன்பிறந்த சகோதரி ஆவார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
விமல் சொக்கநாதன் யாழ்ப்பாணம், கொக்குவிலில் தம்பு சொக்கநாதன், விமலாதேவி சொக்கநாதன் ஆகியோருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொழும்பு உவெசுலி கல்லூரியிலும், புனித பெனடிக்ட் கல்லூரியிலும் கற்று, பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். சட்டக் கல்லூரி மாணவராக இருக்கும் போது 1963 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகச் சேர்ந்தார். 1970 இல் இவரது பதவி நிரந்தரமாக்கப்பட்டது. இலங்கை வானொலியில் இவர் படைத்த இசையும் கதையும், வாலிப வட்டம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை கலந்து இவர் வழங்கிய களம் பல காண்போம் என்ற உலக அரசியல் ஆய்வு நிகழ்ச்சி பல அரசியல் தலைவர்களையே கவர்ந்தது. வானொலி ஒலிபரப்புக் கலை பற்றி "வானொலிக் கலை" என்ற நூலை எழுதியுள்ளார்.
1976 ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்து அங்கு சட்டத்தொழிலில் ஈடுபட்டார். அத்துடன், பிபிசி தமிழோசையில் அறிவிப்பாளராக இணைந்தார்.
Remove ads
நடித்த மேடை நாடகம்
- வரணியூரானின் பாசச்சுமை
நடித்த திரைப்படம்
எழுதிய நூல்கள்
- வானொலிக் கலை, சென்னை: காந்தளகம், மே 2007
- விமலின் பக்கங்கள், சென்னை
- இலண்டனில் இருந்து விமல், 2023
மறைவு
விமல் சொக்கநாதன் 2023 ஆகத்து 1 மாலையில் நடைப் பயிற்சிக்காக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads