வெ. இராமபத்ர நாயுடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திவான் பகதூர் வெ. இராமபத்ர நாயுடு (Rama Bhadra Naidu, டிசம்பர் 23, 1873 - டிசம்பர் 26, 1929) என்பவர் வடகரை மற்றும் தொட்டப்பநாயக்கனூர் ஜமீனின் ஜமீந்தார் ஆவார்.[1] இவர் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் உறுப்பினராக இருந்துள்ளார். நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவர்.[2] 1908 ஆம் ஆண்டு திவான் பகதூர் என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் வெ. இராமபத்ர நாயுடு, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

வடகரை ஜமீந்தார் வெங்கடசாமி நாயக்கர் மற்றும் கனகம்மா தம்பதியினருக்கு 1873 டிசம்பர் 23 அன்று மகனாக பெரியகுளத்தில் பிறந்தார்.[4] இவரது மூதாதையரான இராமபத்ர நாயக்கர், நாகம நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார்.[5] இவர் பலிஜா இனக்குழுவைச் சேர்த்தவர். இவர் தனது உறவினரான விசுவநாத நாயக்கரிடம் இராணுவத் தளபதியாக பணிபுரிந்தார்.[6] இராமபத்ர நாயுடுவின் மகன் நாகம இராமபத்ர நாயுடு, இந்திய பிராந்திய படையின் அதிகாரியாக பணியாற்றியவர்.

Remove ads

பொறுப்புகள்

  • 1902 - நிறுவன தலைவர், விக்டோரியா நினைவு மேல்நிலை பள்ளி, பெரியகுளம்
  • 1904 - தலைவர், பெரியகுளம் நகராண்மைக் கழகம்
  • 1908 - தலைவர், பெரியகுளம் கூட்டுறவு சங்கம்
  • 1910 - உறுப்பினர், மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்

இறப்பு

இவர் உடல் நலக் குறைவு காரணமாக 1929 டிசம்பர் 26 வியாழக்கிழமை அன்று காலமானார்.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads