பலிஜா
தெலுங்கு நாயுடுகளான கொல்லா, கவரா, காப்பு ஆகிய சாதிகள் "பலிஜா" வின் பிரிவுகளாக உள்ளனர். From Wikipedia, the free encyclopedia
Remove ads
பலிஜா (Balija) எனப்படுவோர் தமிழகம், கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வாழும் ஒரு வணிக சமூகமாகும்.[1] இவர்களது தாய்மொழி தெலுங்கு மொழியாகும். இவர்கள் தமிழ்நாட்டில் கவரா என்ற பெயரில் அறியப்படுகின்றனர்.[2] நாயுடு, நாயக்கர், செட்டியார், ரெட்டி மற்றும் ராவ் முதலியன இவர்களது பட்டங்களாகும்.

Remove ads
சொற்பிறப்பு
பலிஜா என்றால் வணிகன் என்று பொருளாகும். பலிஜா என்பது இடைக்கால பயன்பாட்டில் இருந்த சொற்களாலான பலஞ்சா, பனாஞ்சா, பளஞ்சா, பனஞ்சு, வளஞ்சியர் போன்ற சொற்களின் திரிபாகும். இவை அனைத்தும் வடமொழி சொல்லான வனிஜ் என்பதிலிருந்து பெறப்பட்டவையாகும்.[3]
பலிஜா என்றால் யாகம் செய்த பொழுது தோன்றியவர்கள் என்று பொருள். அதாவது சமஸ்கிருத வார்த்தை பாலி - யாகத்தையும், ஜா - பிறந்ததையும் கொண்டு பெறப்படுகிறது.[4]
பூர்வீகம்
அய்யபொழில் என்ற வணிகக்குழுவினர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வணிகம் செய்தனர்.[5] கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, ஆந்திர நாட்டில் வீர பலஞ்சா என்ற வணிகக்குழுவினரை பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகள் தோன்றத் தொடங்கின. வீர பலஞ்சா வணிகர்களின் தலைமையிடமாக அய்யபொழில் திகழ்ந்தது.[6] அய்யபொழில் நகரம் என்பது தற்கால கருநாடக மாநில பீசப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐஹோல் நகரமாகும்.[7] இவ்வணிகர்கள் தெலுங்கில் வீர பலிஜா என்றும் கன்னடத்தில் வீர பனாஜிகா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர். இதன் பொருள் தீரமிக்க வணிகர்கள் என்பதாகும்.[8]
இடைக்காலம்
மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரன் ஆட்சிக் காலத்தில் பலிஜா சமூகத்தவர்கள் வாழ்ந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளன.[9]
பின்னர் காக்கத்திய மன்னர் இரண்டாம் பிரதாபருத்திரர் ஆட்சிக் காலத்தில் பலிஜா இனக்குழுவினரை பற்றிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.[10] பிரதாப ருத்திரர் சரித்திரம் மற்றும் ஶ்ரீ சித்தேஸ்வரர் சரித்திரம் ஆகிய தொன்மையான தெலுங்கு வரலாற்று நூல்களின் படி, காக்கத்தியர் இராஜ்யத்தில் பலிஜா சமூகத்தவர்கள் வாழ்ந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.[11]
விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயர், முதல்முறையாக பலிஜா சமூகத்தவர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டினார். இவரது ஆட்சி காலத்தில் விஜயநகர பேரரசுக்கு உட்பட்ட மாகாணங்களை மேற்பார்வையிட பலிஜா இனத்தை சேர்த்த மண்டலேஸ்வரர்கள் நியமிக்கப்பட்டனர்.[12]
வரலாற்றாய்வாளர் நொபொரு காராசிமாவின் கூற்றுப்படி விஜயநகரப் பேரரசின் ஆட்சி காலத்தில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி, சென்னபட்டணம், பேளூர், இராயதுர்கம் ஆகிய பகுதிகள் பலிஜா இனத்தவர்களால் ஆளப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.[13]
Remove ads
பலிஜாவின் பிரிவுகள்
- பலிஜா எனப்படுவோர் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் காப்பு இனத்தின் ஒரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர்.[14] இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் முற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ளனர். இவர்களின் குடும்ப தெய்வமாக வெங்கடாசலபதியை வழிபடுகின்றனர்.[15] இவர்கள் வைணவ நெறிகளைப் பின்பற்றுகின்றனர். இவ்வினத்தவர்கள் ஆந்திர மாநிலத்தின் இராயலசீமை பகுதியில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.[16]
- கவரா எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் பலிஜா இனத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[17] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[18] கவரைகள், பலிஜா சமூகத்துடன் திருமண உறவுகளை கொண்டுள்ளார்.[19] இவ்விரு சமூகத்தவர்களும் கௌரி விரதத்தைக் கடைபிடிப்பது வருகின்றனர்.[20]
- 24 மனை தெலுங்குச் செட்டியார் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் பலிஜா சமூகத்தின் ஒரு பிரிவினராக இருந்தனர். பின்னர் தொழில் அடிப்படையில் தனித்துவமான சமூகமாக மாறினார். இச்சமூகத்தினர் ஜனப்பன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.[21]
- தசா பலிஜா எனப்படுவோர் கர்நாடகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் சைன சத்திரிய இராமானுச சாது பலிஜர் என்றும் அறியப்படுகின்றனர். ஏனெனில் சைன சத்திரியான இச்சமூகத்தினர் பிட்டி தேவாவின் ஆட்சிக் காலத்தில் வைணவ தத்துவாதியான இராமாணுசரால் சைன சமயத்திலிருந்து வைணவ சமயத்திற்கு மாறினார். இம்மக்கள் வைணவ பக்தி ஆச்சாரங்களைப் பின்பற்றுகின்றனர்.[22]
அரச வம்சங்கள்
விஜயநகர மன்னர்களால் பேரரசுக்கு உட்பட்ட மாகாணங்களை மேற்பார்வையிட அரசுப் பிரதிநிதிகளை நியமித்தனர். ஆயினும் தலைக்கோட்டை போருக்கு பின்னர் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைத்தது. விஜயநகர மன்னர்களால் நியமிக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகள் தாங்கள் மேற்பார்வையிட்ட மாகாணங்களில் சுதந்திர அரசுகளை நிறுவிக் கொண்டனர். அவ்வாறு பலிஜா இனக்குழுவைச் சேர்ந்தவர்களால் நிறுவப்பட்ட அரச வம்சங்கள் பின்வருவன. [23]
Remove ads
குறிப்பிடத்தக்க நபர்கள்
அரசர்கள்
- விசுவநாத நாயக்கர் - மதுரை நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[30]
- சேவப்ப நாயக்கர் - தஞ்சை நாயக்கர்கள் அரச வம்சத்தை நிறுவியவர்.[31]
- கிருஷ்ணப்ப நாயக்கர் - செஞ்சி நாயக்கர்கள் அரச வம்சத்தை நிறுவியவர்.[26]
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[29]
- ராணா ஜெகதேவராயன் - ஜெகதேவராயர்கள் வம்சத்தை நிறுவியவர்.[28]
- பெத்த கோனேடி நாயுடு - பெனுகொண்டா நாயக்கர்கள் அரச வம்சத்தை நிறுவியவர்.[27]
- கிருஷ்ணப்ப நாயக்கர் - பேளூர் நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[13]
ஜமீன்தார்கள்
- வெ. இராமபத்ர நாயுடு - வடகரை ஜமீன்தாரும், மதுரை நாயக்க மன்னரான விசுவநாத நாயக்கரின் நெருங்கிய உறவினரும் இராணுவத் தளபதியுமான இராமபத்ர நாயக்கரின் வம்சாவளியைச் சேர்ந்தவரும் ஆவர்.[32]
- குமரப்ப சங்கரைய நாயுடு - சென்னப்ப நாயக்கன் பாளையம் ஜமீன்தாரும், செஞ்சி நாயக்க மன்னரான துபாகி கிருஷ்ணப்ப நாயக்கரின் வம்சாவளியைச் சேர்ந்தவரும் ஆவர்.[33]
அரசியல்வாதிகள்
- ஈ. வெ. இராமசாமி - சமூக சீர்திருத்தவாதி[34]
- பட்டுக்கோட்டை அழகிரி - சமூக சீர்திருத்தவாதி[35]
- வரதராஜுலு நாயுடு - விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவனர்.[36]
- திருச்சி இரா. சவுந்தரராசன் - முன்னாள் சத்துணவுத் துறை அமைச்சர்[37]
- விசயகாந்து - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்[38]
- கோ. இலட்சுமணன் - மக்களவை துணை சபாநாயகர்
- எ. வ. வேலு - தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர்[37]
- பி. கே. சேகர் பாபு - தமிழக அறநிலையத்துறை அமைச்சர்[39]
- இ. மதுசூதனன் - முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - முன்னாள் ஒன்றிய ஜவுளிதுறை இணை அமைச்சர்[40]
- கு. பிச்சாண்டி - முன்னாள் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர்[37]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads