வெங்கடமகி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெங்கடமகி (Venkatamakhin) [1] அல்லது வெங்கடமகின் ஒரு இந்தியக் கவிஞரும், இசைக்கலைஞரும், கர்நாடக இசைக்கலைஞருமாவார். [1] இவர் தனது "சதுர்தண்டி பிரகாசிகா"வுக்கு புகழ் பெற்றவர். அதில் இவர் இராகங்களை வகைப்படுத்தும் மேளகர்த்தா முறையை விளக்குகிறார். [2] இவர், தேவாரப் பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜரைப் புகழ்ந்து கீதங்களையும், பிரபந்தங்களையும் அத்துடன் 24 அஷ்டபதிகளையும் இயற்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் வெங்கடமகி, மற்ற பெயர்கள் ...
Remove ads

சுயசரிதை

வெங்கடமகி என்கிற வெங்கடேசுவர தீட்சிதர், சிமோகா மாவட்டத்திலுள்ள ஒன்னாலியைச் சேர்ந்த கன்னட பிராமணர் கோவிந்த தீட்சிதரின் மகனாவார். இவரது தந்தை தஞ்சாவூரின் இரகுநாத நாயக்கரிடம் அமைச்சராக இருந்தார். [3] இவரது தந்தை, இவருக்கும் இவரது சகோதரர் யக்னநாராயண் என்பவருக்கும் வீணை இசையைக் கற்பித்தார். பின்னர் இவர், தனப்பாச்சார்யா என்பவரிடம் பாரம்பரிய இசையின் அறிவார்ந்த அம்சங்களில் பயின்றார். இவர், சமசுகிருதம், சோதிடம், ஏரணம், மெய்யியல், அலங்காரம் போன்ற பல்வேறு பாடங்களில் அறிவைக் கொண்டிருந்தார். [4]

தனது தந்தையைப் போலவே, இவரும் இரகுநாத நாயக்கரின் மகனான விஜயராகவ நாயக்கரிடம் (1633-1673) பணிபுரிந்தார். கர்நாடக இசையில் இராகங்களை வகைப்படுத்துவது குறித்து எந்த அதிகாரபூர்வமான கட்டுரையும் இல்லை என்பதால், மன்னர், இவரை மிகவும் புகழ்பெற்ற இவரது படைப்பான "சதுர்தண்டி பிரகாசிகா" என்ற நூலைத் தொகுக்க நியமித்தார். [1] இவர் திருவாரூரின் பிரதான தெய்வமான தியாகேசரின் பக்தராக இருந்தார். மேலும் அவரது நினைவாக 24 அஷ்டபதிகளை இயற்றினார். [4]

இவரது, "சதுர்தண்டி பிரகாசிகா" கர்நாடக இசையின் ஒரு அடையாளமாக இருந்தது. இது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அச்சிடப்படும் வரை கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இது சுரங்களை அடிப்படையாகக் கொண்ட மேளகர்த்தா இராகங்களின் முறையான மற்றும் விஞ்ஞான வகைப்பாட்டை வழங்குகிறது.

Remove ads

மேற்கோள்கள்

குறிப்புகள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads