வெஸ்டின் சென்னை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெஸ்டின் சென்னை (Westin Chennai), இந்தியாவின் தமிழக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்ள, வேளச்சேரியில் வேளச்சேரி முதன்மைச் சாலையில் அமைந்துள்ள விடுதி ஆகும். பத்து அடுக்குகளைக் கொண்ட இந்த விடுதி ஐந்து நட்சத்திர மதிப்பு கொண்டது. இது இந்தியாவில் அமைந்த ஆறாவது வெஸ்டின் ஹோட்டல் ஆகும். இது சென்னையின் தென்பகுதிப் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வெஸ்டின் சென்னை, விடுதி சங்கிலி ...
Remove ads

வரலாறு

பிப்ரவரி 2013 இல் வெஸ்டின் சென்னை ஹோட்டல் திறக்கப்பட்டது. நவம்பர் 2013 இல் ஆசிய உணவகத்தினைத் தொடங்கியது. அந்த உணவகம் ஆங்கிலத்தில் சுருக்கமாக EEST (Elegant, Exquisite, Serenity and Triumph) என்று அழைக்கப்பட்டது.[1]

அருகாமையில் உள்ள இடங்கள்

வெஸ்டின் சென்னை ஹோட்டலுக்கு அருகே சென்னையின் கிண்டி கிரிக்கெட் மைதானம், இந்திய தொழில்நுட்பக் கழகம், கிண்டி தேசியப் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. இவற்றுடன் கிண்டி குதிரைப் பந்தயப் பகுதி மற்றும் சென்னை பாம்புப் பூங்கா மிக அருகில் அமைந்துள்ளன.[2]

விடுதி

வெஸ்டின் சென்னை விடுதி சுமார் 7792 சதுர மீட்டர் பரப்பளவுடைய இடத்தில் கட்டப்பட்டுள்ளது.[3] இங்கு நான்கு உணவு மற்றும் குளிர்பானம் அருந்தும் இடங்கள் உள்ளன. இதில் தினசரி உணவகம், சிறப்பு உணவகம், ஒரு பார் மற்றும் நீச்சல் குளத்தருகில் அமைந்துள்ள உணவகம் ஆகியவை அடங்கும். ஓய்வுநேரத்தில் பொழுதுபோக்குப் பகுதியாக உடற்பயிற்சி செய்யும் இடம், வெளிப்புற நீச்சல் குளம், மருத்து நீருற்று மற்றும் குழு ஓட்டப் பகுதி போன்ற இடங்கள் உள்ளன. இவற்றுடன் 12600 சதுர அடி (1170 சதுர மீட்டர்) பரப்பளவு கொண்ட கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் உள்ளது. இவற்றில் தூண்கள் இல்லாத நடன அறை[4], 12 இடை ஓய்வறைகள், வணிக மைய அறை ஆகியவை அடங்கும். இரண்டாம் மாடிதளத்தில் வெளிப்புற நீச்சல் குளம் உள்ளது.[3] முற்றத்தில் 35 அடி உயரம் கொண்ட நீர் தொடர்பான அழகுத்தோற்றம் அமைந்துள்ளது.

அறைகளும் இதர வசதிகளும்

இந்த விடுதியில் கிளப் அறை, பிரிமீயம் அறை, டீலக்ஸ் அறை என்ற வகைப்பாட்டில் அறைகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பப்படுகின்றன. குளிர்பதன வசதி, உயர்தூக்கி, புகை பிடிக்கக் அறை, விரைவு உள்புகுதல் மற்றும் விரைவு வெளியேறுதல், கட்டணத்துடன் கூடிய கம்பியில்லா இணையச் சேவை மற்றும் விருந்து வசதி, வணிகச் சேவைகள், தனிப்பட்ட சேவைகள், பயண வசதிகள், மறு உருவாக்கம ஆகிய வசதிகள் விடுதியின் வசதிகள் மற்றும் இதர வசதிகள் போன்ற வகைகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads