வெஸ்ட்வொர்ல்டு (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

வெஸ்ட்வொர்ல்டு (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

வெஸ்ட்வொர்ல்டு (ஆங்கிலம்: Westworld) ஒரு ஐக்கிய அமெரிக்க வடக்கு அறிவியல் புனைவு தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஜோனதன் நோலன் மற்றும் லீசா ஜாய் ஆல் உருவாக்கப்பட்டது. எச்பிஓ ஆல் தயாரிக்கப்படுகிறது. மைக்கேல் கிரைட்டனால் எழுதி இயக்கப்பட்ட அதே பெயரிலான 1973 திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் ஹோஸ்ட் என்று அழைக்கப்படும் தானியங்கிகள் நிறந்த கேளிக்கைப் பூங்காவில், பணக்கார மனித விருந்தாளிகள் தங்களது அனைத்து ஆசை மற்றும் இன்பங்களை எவ்வித பதிலடியும் இல்லாமல் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

விரைவான உண்மைகள் வெஸ்ட்வொர்ல்டு Westworld, வகை ...

நோலன் மற்றும் ஜாய், ஜே. ஜே. ஏபிரகாம்சு, ஜெர்ரி வெயின்டிரவுப், மற்றும் பிரையன் பர்க் ஆகியோருடன் இணைந்து இத்தொடரினை தயாரித்துள்ளனர். முதல் சீசன் அக்டோபர் 2, 2016 முதல் திசம்பர் 4, 2016 வரை வெளியானது; அதில் 10 எபிசோடுகள் ஒளிபரப்பானது. நவம்பர் 2016 இல் எச்பிஓ மற்றொரு பத்து எபிசோடு சீசனிற்கு புதுப்பித்தது. ஏப்ரல் 22, 2018 முதல் சூன் 24, 2018 வரை இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. மார்ச்சு 15, 2020 அன்று மூன்றாம் சீசன் வெளியானது.

விமர்சகர்களால் பெரிதும் இத்தொடரின் ஒளிப்பதிவு, கதை மற்றும் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

Remove ads

கதாப்பாத்திரங்கள்

  • இவான் ரசேல் வூட் - டொலோரெசு அபெர்னாத்தி ஆக, பூங்காவில் இருக்கும் மிகப்பழைய ஹோஸ்ட் ஆவார். விவசாயியின் மகளாக இருந்த டொலோரெசு, தனது வாழ்க்கை முழுதும் ஒரு மிகப்பெரிய பொய் என்று கண்டறிகிறார்.[3]
  • தாண்டி நியூட்டன் - மேவ் மில்லே ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். ஸ்வீட்வாட்டரின் விபசார விடுதியுனை நடத்துபவராக அமைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவரது முந்தைய அமைப்பின் நினைவுகள் இவருக்கு திரும்ப வர உயிர்ப் பெறுகிறார்.[4]
  • ஜெப்ரி ரைட் - பெர்னார்டு லோவ், வெஸ்ட்வொர்ல்டின் நிரலாக்க பிரிவின் தலைவர் மற்றும் செயற்கை அறிவு மென்பொருளின் நிரலாக்கர்.[5] வெஸ்ட்வொர்ல்டின் இணை நிறுவனர் அர்னால்ட் வெப்ப்ர் ஆகவும் ரைட் சித்தரிக்கிறார்.
  • ஜேம்ஸ் மார்ஸ்டன் - டெட்டி பிளட் ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். டொலோரெசுவுடன் தனது காதலைப் புதுப்பிக்க ஸ்வீட்வாட்டரிக்கு வருகிற துப்பாக்கி வீரர் ஆக அமைக்கப்பட்டுள்ளார்.[6][7]
  • டெஸ்சா தாம்ப்சன் - சார்லொட் ஹேல், டெலோஸ் நிறுவனத்தின் நிருவாக குழுவின் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்த நிர்வாக குழு வெஸ்ட்வொர்ல்டு மற்றும் பிற பூங்காக்களினை மேற்பார்வையிடுகிரது.[8][9]
  • இன்கிறிட் போல்ஸ் பெர்தால் - ஆர்மிசுடைசு ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். அவர் ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற கொள்ளைக்காரர், மற்றும் ஹெக்டர் எஸ்கடனின் கும்பலின் உறுப்பினர்.[10]
  • லூக் ஹெம்ஸ்வர்த் - அஷ்லீ ஸ்டப்சு ஆக. வெஸ்ட்வொர்ல்டு பூங்காவின் பாதுகாவலர்..[11]
  • சிட்சே பப்பெட் நுட்சன் - தெரெசா கல்லன் ஆக. வெஸ்ட்வொர்ல்டு பூங்காவின் தரக்கட்டுப்பாட்டுத் தலைவர். (சீசன் 1, சீசன் 2 விருந்தினர்)[12]
  • சைமன் குவாட்டர்மன் - லீ சைசுமோர் ஆக, வெஸ்ட்வொர்ல்டின் கதை இயக்குநர்.[10]
  • ரோட்ரிகோ சாண்டோரோ - ஹெக்டர் எசுகடோன், ஒரு ஹோஸ்ட் ஆவார். அவர் ஸ்வீட்வாட்டரில் உள்ள மரிபோசா ஹோட்டலைக் கொள்ளையடிக்க விரும்பும் ஒரு கும்பல் தலைவர்.[11]
  • ஆஞ்செலா சரஃப்யான் - கிளமன்டைன் பென்னிஃபெதர் ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். மேவ்வின் விபசார பெண்களில் ஒருவராக அமைக்கப்பட்டுள்ளார்.[10]
    • லில்லி சிம்மன்சு அசல் கிளமன்டைன் செயலிழக்கப்பட்ட பிறகு அதே பெயரிலான ஒரு ஹோஸ்ட் ஆக நடித்துள்ளார்.[13]
  • சேனன் வுட்வர்டு - எல்சி ஹூக்ஸ் ஆக, டெலோஸ்சின் நிரலாக்க குழுவின் நட்சத்திர பணியாளி ஆவார்.[11]
  • எட் ஹாரிசு - மென் இன் பிளாக் ஆக, பூங்காவிற்கு பல ஆண்டுகளாக வருகை தருபவர்.[14]
  • அந்தோணி ஹோப்கின்ஸ் - ராபர்ட் ஃபோர்டு ஆக, பூங்காவினை நிறுவியர்களில் ஒருவர் ஆவார். வெஸ்ட்வொர்ல்டு பூங்காவின் இயக்குநர் ஆவார்.[3]
  • பென் பார்னெஸ் - லோகன் டெலோஸ் ஆக. வில்லியமை பூங்காவிற்கு அறிமுகம் செய்தவர்.[15]
  • கிளிஃப்டன் காலின்சு சூனியர் - லாரன்சு / எல் லாசோ ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார்.
  • சிம்மி சிம்ப்சன் - வில்லியம் ஆக, வெஸ்ட்வொர்ல்டு பூங்காவிற்கு வருகை தரும் விருந்தாளி. முதலில் விருப்பமில்லாமல் இருந்த வில்லியம் பின்னர் பூங்காவின் ரகசியங்களை கண்டறிகிறார். (சீசன் 1–தற்காலம்)[12]
  • ஃபாரெசு ஃபாரெசு - அன்டாயின் கோஸ்டா, கார்ல் ஸ்டிராண்டின் பாதுகாப்பு குழுவில் ஒருவர். (சீசன் 2)[16]
  • லூயிசு ஹெர்தம் - பீட்டர் அபெர்னாத்தி ஆக,[17] டொலோரெஸ்சின் தந்தை. (சீசன் 2–தற்காலம், சீசன் 1 இல் சில எபிசோடுகளில்)[18]
    • பிராடுபோர்டு டேடம் - முதல் சீசனில் அசல் அபெர்னாத்தி செயல்யிழக்கப்பட்ட பிறகு பீட்டர் அபெர்னாத்தி ஆக நடித்துள்ளார்
  • தலூலா ரைலி - ஆஞ்செலா ஆக, ஒரு ஹோஸ்ட் ஆவார். பூங்காவிற்கு வருகை தருவோர்களை வரவேற்பவர். (சீசன் 2, இடைவிட்டு சீசன் 1)[19]
  • குசுடாஃப் ஸ்கார்ஸ்கார்டு - கார்ல் ஸ்டிராண்டு ஆக, டெலோஸ்சின் செயல்பாட்டுத் தலைவர் ஆவார். (சீசன் 2)[16]
  • காட்ஜா ஹெர்பர்சு - எமிலி கிரேசு ஆக, பிரித்தானிய ராஜ் பூங்காவின் ஒரு விருந்தாளி ஆவார். ஹோஸ்டுகளின் எழுச்சியின் போது வெஸ்ட்வொர்ல்டுயிற்கு தப்பித்தார். (சீசன் 2–தற்போது)[20]
  • சான் மெக்கிளமொன் - அகிசெடா ஆக, ஒரு கோஸ்டு நேசன் பெரியவர். (இரண்டாம் சீசன் – தற்காலம்)[21][22]
  • ஆரோன் பவுல் - கேலப் ஆக, ஒரு கட்டுமானப் பணியாளர். (மூன்றாம் சீசன்)[23]

பல்வேறு நடிகர்கர் மூன்றாம் சீசனில் சேர உள்ளனர்.[24][25][26][27]

Remove ads

தயாரிப்பு

உருவாக்கம்

Thumb
மைக்கேல் கிரைட்டன், இவர் எழுதி இயக்கிய வெஸ்ட்வொர்ல்டு திரைப்படத்தின் அடிப்படையிலேயே இத்தொடர் தயாரிக்கப்பட்டது.

ஆகத்து 31, 2013 அன்று, நோலன், ஜாய், ஜே. ஜே. ஏபிரகாம்சு, ஜெர்ரி வெயின்டிரவுப் மற்றும் பிரையன் பர்க் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஒரு தொலைக்காட்சித் தொடரினை தயாரிக்கப்போவதாக எச்பிஓ அறிவித்தது.[28]

எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் இக்கதை ஐந்து சீசன்களுக்கு எழுதப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[29]

நவம்பர் 2016, எச்பிஓ இத்தொடரினை இரண்டாம் சீசனிற்கு புதுப்பித்தது.[30] ஏப்ரல் 22, 2018 அன்று இரண்டாம் சீசன் வெளிவந்தது.[31] மே 1, 2018 அன்று மூன்றாம் சீசனிற்கு புதுப்பிக்கப்பட்டு[32], தயாரிப்பு ஏப்ரல் 2019 இல் துவங்கியது. இந்த சீசன் மார்ச்சு 15, 2020 அன்று வெளியானது.[25]

திரையாக்கம்

35மி.மீ திரையில் திரைப்பிடிப்பு செய்ய முதலில் திட்டமிடப்பட்டது. இந்த டேப்புகளை தொடர்ச்சியாக வாங்குவது கடினமாக இருந்திருந்தாலும் திரைப்பிடிப்பு தொடர்ந்தது.[33][34] ஈஸ்ட்மேன் கோடாக் திரைப்பட திரையில் திரைப்பிடிப்பு செய்யப்பட்டது. இது டிஜிட்டலிற்கு மாற்றப்பட்டு திருத்தப்பட்டு எச்பிஓவிற்கு த்ரப்பட்டது. வார்னர் புரோஸ். இற்கு பரணிட ஒரு பிரதி வழங்கப்பட்டது.[35]

இசை

Thumb
ரமீன் ஜவாடி இத்தொடரிற்கு இசையமத்துள்ளார்.

இந்த தொலைக்காட்சிதொடரின் இசை ரமீன் ஜவாடியால் இசையமைக்கபட்டது. ஜோனதன் நோலனின் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் தொலைக்காட்சித்தொடரினையும் இவரெ இசையமைத்தார் .[36][37] இத்தொடரின் இசைத்தட்டு திசம்பர் 5, 2016 அன்று வெளியிடப்பட்டது.[38]

கான்யே வெஸ்ட், த ரோலிங் ஸ்டோன்ஸ், ஏமி வைன்ஹவுஸ் ஆகியோரின் பாடல்களை பியானோ மற்றும் கித்தார் ஆகிய இசைக்கருவிகளுக்கு மாற்றப்பட்டு இத்தொடரிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.[39] இதற்கு $15,000 முதல் $55,000 வரை செலவிடப்பட்டது.[40] இது பூங்காவின் செயற்கைத்தனத்தினை பார்வையாளர்களுக்கு காட்ட பயன்படுத்தப்படுள்ளதாக இசையமைப்பாளர் ஜவாடி தெரிவித்தார்.

Remove ads

வெளியீடு

ஒளிபரப்பு

பத்து எபிசோடுகளைக் கொண்ட முதல் சீசனின்[41] முதல் எபிசோடு வட அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியாவில் அக்டோபர் 2, 2016 அன்று ஒளிபரப்பானது.[42][43][44] ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்தில் அக்டோபர் 4, 2016 அன்று வெளியானது.[45] ஐக்கிய அமெரிக்காவில் எச்பிஓவிலும், கனடாவில் எச்பிஓகனடாவிலும், இலத்தீன் அமெரிக்காவில் எச்பிஓ இலத்தீன் அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்தில் ஸ்கை அட்லாந்திக்கிலும்[45], ஆத்திரேலியாவில் ஃபாக்சு ஷோகேசிலும் ஒளிபரப்பானது.[44][46]

ஐக்கிய அமெரிக்காவில் முதல் சீசனின் இரண்டாம் எபிசோடு எச்பிஓவில் அக்டோபர் 7அன்று இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒளிபரப்பானது. இது 2016 இல் ஐக்கிய அமெரிக்க குடியரசுத்தலைவர் பட்டிமன்றத்திற்காக மாற்றப்பட்டது.[47][48]

சந்தைப்படுத்தல்

வெஸ்ட்வொர்ல்டு ஒளிபரப்பிற்கு முன், எச்பிஓ தோற்ற மெய்ம்மை நிகழ்வுகளை நடத்தியது.[49][50][51] தொற்று விளம்பர முறை இணையதள் நிகழ்வுகளையும் செய்தது.[52]

மார்ச்சு 2018 இல், இரண்டாம் சீசன் ஒளிபரப்பிற்கு முன்னால், எச்பிஓ வெஸ்ட்வொர்ல்டு நகரமான ஸ்வீட்வட்டரினை ஆஸ்டின் நகரம் அருகில் இரண்டு ஏக்கர் இடத்தில் கட்டியது.[53][54]

சனவரி 2020 நுகர்வு இலத்திரனியல் கண்காட்சியில், மூன்றாம் சீசனின் முன்னால், எச்பிஓ "இன்சைட்டு" நிகழ்வினை நடத்தியது.[55]

ஊடகங்கள்

வெஸ்ட்வொர்ல்டின் முதல் சீசன் (தி மேஸ் என்று குறியிடப்படுள்ளது) நீலக்கதிர் வட்டு, டிவிடி, மற்றும் 4கே புளூரேயில் நவம்பர் 7, 2017 அன்று வெளியானது. ஐக்கிய அமெரிக்காவில் 4கே புளூரேயில் வெளியான முதல் தொலைக்காட்சித் தொடர் இதுவே ஆகும்.[56] இரண்டாம் சீசன் (தி டோர்) நீலக்கதிர் வட்டு, டிவிடி, மற்றும் 4கே புளூரேயில் திசம்பர் 4, 2018 அன்று வெளியானது.[57]

வரவேற்பு

விமர்சகர்கள் வரவேற்பு

மேலதிகத் தகவல்கள் சீசன், விமர்சகர்கள் வரவேற்பு ...

இத்தொடரின் திரைபிடிப்பு, நடிப்பு மற்றும் கதையிற்காக விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.[58][59][60]

மதிப்பீடுகள்

ஐக்கிய அமெரிக்காவில் முதல் எபிசோடின் ஒளிபரப்பை 19.6 இலட்சம் பேர் பார்த்தனர், அதில் 8 இலட்சம் பேர் 18-49-வயதுடையவர்கள் ஆவர்.[61] இணையதள் ஒளிபரப்பினையும் சேர்த்து 33 இலட்சம் நபர்கள் கண்டுகளித்தனர்.[62] முதல் சீசனின் கடைசி எபிசோடினை முதல் ஒளிபரப்பில் 22 இலட்சம் நபர்கள் கண்டுகளித்தனர். இதன் மறு ஒளிபரப்பினை பார்த்தவர்களியும் சேத்து 35 இலட்சம் பேர் கண்டுகளித்தனர்.முதல் சீசனினை 120 இலட்சம் மக்கள் மொத்தமாக கண்டுகளித்தனர். இதனால் எச்பிஓ வின் அதிகம் கண்டுகளிக்கப்பட்ட முதல் சீசன் என்ற பெருமையினைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டில் பிட்டொரென்ட் இல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் மூன்றாவது இடம் பெற்றது.[63] வார்ப்புரு:Television ratings graph

விருதுகள்

வெஸ்ட்வொர்ல்டு 43 எம்மி விருதுகள், 3 கோல்டன் குளோப் விருதுகள், 2 சாட்டில்லைட் விருதுகள், மற்றும் 4 கிறிடிக்ஸ் சாய்சு விருதுகள்,ஆகியவற்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads