வோல்கோகிராட் அரங்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வோல்கோகிராட் அரங்கு (Volgograd Arena [1] (உருசியம்: «Волгоград Арена») உருசியாவின் தொழில்நகரமான வோல்கோகிராட்டில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நிகழிடங்களில் இதுவும் ஒன்றாகும். இது ரோடார் வோல்கோகிராட் கால்பந்துக் கழகத்தின் தாயக அரங்கமாக உள்ளது. இதில் 45,568 பார்வையாளர்கள் அமரக்கூடும்.[2]
Remove ads
வரலாறு
வோல்கா ஆற்றின் அருகே மமயேவ் குர்கன் நினைவுச்சின்னத்தின் அடிவாரத்தில் முன்பிருந்த சென்ட்ரல் விளையாட்டரங்கை இடித்து அந்த இடத்தில் இந்த அரங்கு கட்டப்பட்டுள்ளது. முந்தைய அரங்கு 1958இல், அதற்கு முன்பிருந்த எண்ணெய்க் கிடங்கை அழித்துக் கட்டபட்டிருந்தது. இப்பகுதி கணவாய்கள் நிறைந்த வளராத நகரப்பகுதியாகும்; அங்குமிங்குமான குறைந்த மதிப்புள்ள வீடுகளும் கிடங்குகளும் படைத்துறை வீடுகளுமே இருந்தன.
40,000 பேர் காணக்கூடிய அளவில் ஒலிம்பிக் தரமுள்ள தடகளமும், இரண்டு பெரிய விளையாட்டரங்குகளும் பத்து உடற்பயிற்சியகங்களும் கொண்டதாகவும் செலவை சேமிப்பதற்காக கச்சிதமாகவும், ஒரே வளாகமாகவும் புதிய அரங்கைக் கட்டத் திட்டமிடப்பட்டது. இந்த வளாகத்தில் நீச்சற்குளமும் குதிரையேற்றப் பள்ளியும் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது; இவை நிதிப் பற்றாக்குறையால் கைவிடப்பட்டன.
Remove ads
2018 பிபா உலகக் கோப்பை
பிபா உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னர்
2018 பிபா உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னர் இவ்வரங்கு உள்ளூர் ரோடோர் வோல்கோகிராடு கால்பந்துக் கழகத்திற்கு கையளிக்கப்படும். நகரின் பண்பாட்டு, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் விழாக்கள், கண்காட்சிகள், கச்சேரிகளுக்கும் பயன்படுத்தப்படும். வருங்காலத்தில் இங்கொரு உடல்பேணல் மையமும் அமைக்கப்படும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads