வடிவவியலில் ஒவ்வொரு பன்முகிக்கும் ஒரு இரும வடிவம் உண்டு. இருமப் பன்முகத்திண்மங்கள் அல்லது இருமப் பன்முகிகள் (dual polyhedron, பன்மை: dual polyhedra) இரண்டில் ஒன்றன் உச்சிகளுக்கு ஒத்தவையாக மற்றதன் முகங்கள் இருக்கும். மேலும் ஒன்றன் உச்சிகளின் சோடிகளை இணைக்கும் விளிம்புகளுக்கு ஒத்ததாக மற்றதன் முகங்களின் சோடிகளுக்கு இடையிலுள்ள விளிம்புகள் இருக்கும்.[1] இரும வடிவங்கள் கருத்தியலானவை; எல்லா இருமங்களும் வடிவவியல் பன்முகிகளாக இருப்பதில்லை.[2] ஒரு பன்முகியின் இருமத்தின் இருமம் அதே பன்முகியாக இருக்கும்.
இருமத்தன்மை ஒரு பன்முகியின் சமச்சீர்மையைப் பாதுகாக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட சமச்சீர்மை தொகுதியிலுள்ள பன்முகிகளின் இருமங்கள் அதே சமச்சீர்மை தொகுதியைச் சேர்ந்ததாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக ஒழுங்கு பன்முகிகளான பிளேட்டோவின் சீர்திண்மங்களும்கெப்ளர்-பாயின்சாட்டு சீர்திண்மங்களும் இருமங்களாக இருக்கும். ஒழுங்கு நான்முகி, தனக்குத்தானே இருமம் (தன்-இருமம்) ஆகும்.
சில ஒழுங்குப் பன்முகிகளின் இருமங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
நான்முகி தன்-இருமம் கொண்டது. அதாவது தனக்குத்தானே இருமமாக இருக்கும்.
Cundy, H. Martyn; Rollett, A. P. (1961), Mathematical Models (2nded.), Oxford: Clarendon Press, MR0124167.
Gailiunas, P.; Sharp, J. (2005), "Duality of polyhedra", International Journal of Mathematical Education in Science and Technology, 36 (6): 617–642, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/00207390500064049.