அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
கசார் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.
காசார் | |
---|---|
மாவட்டம் | |
அசாம் மாநிலத்தில் காசர் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
பிரதேசம் | பராக் சமவெளி |
தலைமையிடம் | சில்சார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,786 km2 (1,462 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,36,617 |
• அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS-CA |
அலுவல் மொழி | ஆங்கிலம், வங்காள மொழி |
அதிகமாக பேசப்படும் மொழி | சில்ஹெட்டி மொழி |
இணையதளம் | http://cachar.gov.in/ |
இந்த மாவட்டம், முன்பு இங்கு இருந்த கசாரி அரசாட்சியின் நினைவாக கசார் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது அருகில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்திலிருந்து, 1 ஜூலை 1983 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். [1]
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக சில்சார் நகரம் உள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கர்பி அங்லோங் மாவட்டமும், கிழக்குப் பகுதியில் மணிபூர் மாநிலமும், தெற்குப் பகுதியில் கரீம்கஞ் மாவட்டமும், மேற்குப் பகுதியில் மேகாலயா மாநிலமும் எல்லையாக அமைந்துள்ளது.இதன் பரப்பளவு மொத்தம் 378 சதுர கிலோமீடராகும்.[2] இந்த மாவட்டம் ஏழு சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [3] தோலாய் பட்டியல் சாதிகள் மக்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது.[3] இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு சில்சார், சோனை, தோலை, உதார்பொண்டு, லக்கிபூர், பர்கோலா மற்றும் கட்டிகோரா.
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் 1,736,319 பேர் உள்ளனர். இங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.17 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 958 ஆகவும், மக்களின் கல்வியறிவு 80.36 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 459 ஆகவும் உள்ளது. [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.