துருக்கிய-பாரசீகப் பேரரசு (1077-1231) From Wikipedia, the free encyclopedia
குவாரசமியப் பேரரசு[note 2][7] என்பது தற்போதைய நடு ஆசியா, ஆப்கானித்தான் மற்றும் ஈரான் ஆகியவற்றின் பெரும் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு முன்னாள் நாடு ஆகும். இது துருக்கிய-பாரசீகக்[8] கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சன்னி இசுலாம் மதத்தை பின்பற்றிய ஒரு முஸ்லிம் பேரரசாக இருந்தது. இது 1077 முதல் 1231ஆம் ஆண்டு வரை நீடித்தது. முதலில் செல்யூக் பேரரசு மற்றும் காரா கிதைக்கு (மேற்கு லியாவோ அரசமரபு)[9] அடிபணிந்த நாடாக இது இருந்தது.[10] பிறகு சுதந்திரமாக இந்நாடு செயல்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு வரை இது அவ்வாறாக நீடித்தது. மதிப்பீட்டின் படி, இதன் பரப்பளவு 23,00,000[11] முதல் 36,00,000[12] சதுர கிலோமீட்டர் ஆகும். வரலாற்றின் மிகப் பெரிய நிலப் பேரரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முஸ்லிம் உலகில் இந்தப் பேரரசானது முதன்மையான சக்தி வாய்ந்த நாடாக இருந்தது. இதன் முன்னிருந்த நாட்டை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் பேரரசானது பெரும்பாலும் கிப்சாக் துருக்கியர்களைக் கொண்டிருந்த ஒரு பெரிய குதிரைப்படை இராணுவத்தால் தற்காக்கப்பட்டது.[13]
குவாரசமியப் பேரரசு குவாரசம்சாகியான் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1077–1231 | |||||||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||||||
தலைநகரம் | குர்கஞ்ச் (1077–1212) சமர்கந்து (1212–1220) காசுனி (1220–1221) தப்ரீசு (1225–1231) | ||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||||||||||
அரசாங்கம் | முற்றிலும் முடியாட்சி | ||||||||||||||||||||
குவாரசம்ஷா | |||||||||||||||||||||
• 1077–1096/7 | அனுசுதெசின் கரச்சை | ||||||||||||||||||||
• 1220–1231 | சலாலத்தீன் மிங்புர்னு | ||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக்காலம் | ||||||||||||||||||||
• தொடக்கம் | 1077 | ||||||||||||||||||||
1219–1221 | |||||||||||||||||||||
• எசிசமன் யுத்தம் | 1230 | ||||||||||||||||||||
• முடிவு | 1231 | ||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||
1210 மதிப்பீடு[4] அல்லது | 2,300,000 km2 (890,000 sq mi) | ||||||||||||||||||||
1218 மதிப்பீடு [5] | 3,600,000 km2 (1,400,000 sq mi) | ||||||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||||||
50,00,000 | |||||||||||||||||||||
நாணயம் | திர்காம் | ||||||||||||||||||||
|
எனினும், 1219ஆம் ஆண்டு மங்கோலியர்கள் தங்களது மன்னர் செங்கிஸ் கானின் தலைமையில் குவாரசமியப் பேரரசு மீது படையெடுத்தனர். ஒட்டு மொத்தப் பேரரசையும் இரண்டே ஆண்டுகளில் வெற்றிகரமாகக் கைப்பற்றினர். நகரங்களை முற்றுகையிட்டுச் சூறையாடினர். மனித வரலாற்றின் குருதி தோய்ந்த போர்களில் ஒன்றில் இந்நாட்டில் வாழ்ந்து வந்த குடிமக்களைக் கொன்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.