கேசுபாய் படேல் (Keshubhai Patel) (பிறப்பு: 24 சூலை 1928 - இறப்பு:29 அக்டோபர் 2020) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி சார்பாக முதலமைச்சராக 1995 மற்றும் 1998 முதல் 2001 முடிய பதவியில் இருந்தவர். குஜராத் சட்டமன்ற உறுப்பினராக ஆறு முறை பதவி வகித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஆவார். 2012-இல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு வெளியேறி குஜராத் பரிவர்த்தன் கட்சியை நிறுவி, விஸ்வதர் சட்டமன்ற தொகுதியிலிருந்து வெற்றி பெற்றாலும், 2014-இல் நோய் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தவர்.

விரைவான உண்மைகள் கேசுபாய் படேல், குஜராத்தின் 10வது முதலமைச்சர் ...
கேசுபாய் படேல்
குஜராத்தின் 10வது முதலமைச்சர்
பதவியில்
14 மார்ச் 1995  21 அக்டோபர் 1995
முன்னையவர்சபில்தாஸ் மேத்தா
பின்னவர்சுரேஷ் மேத்தா
தொகுதிவிஸ்வதர்
பதவியில்
4 மார்ச் 1998  6 அக்டோபர் 2001
முன்னையவர்திலீப் பரிக்
பின்னவர்நரேந்திர மோதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூலை 1928 (1928-07-24) (அகவை 96)
விஸ்வதர்
இறப்பு29 அக்டோபர் 2020
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி(1980–2012)
குஜராத் பரிவர்த்தன் கட்சி(2012 – 2014)
துணைவர்லீலா படேல்
பிள்ளைகள்5 மகன்கள், 1 மகள்
As of 17 பிப்ரவரி, 2014
மூடு

அரசியல் வாழ்க்கை

கேசுபாய் படேல் 1960-இல் பாரதிய ஜனசங்கம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். 1975-இல் குஜராத்தில் பாரதிய ஜன சங்கம் மற்றும் நிறுவன காங்கிரசு கட்சி கூட்டணி அரசு அமையப் பெற்றது.[1] நெருக்கடி நிலைக்குப் பின்னர் கேசுபாய் படேல், ராஜ்கோட் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, ஜனதா மோர்ச்சா கட்சியின் பாபு படேல் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக 1979 – 1980 முடிய பதவியில் இருந்தார்.

1979-இல் மச்சு நீர்த்தேக்கம் உடைந்த காரணத்தால், மோர்பி நகரம் முற்றிலும் அழிந்த போது நிவாரணப் பணிகளில் கேசுபாய் படேல் சிறப்பாகப் பங்காற்றியவர்.[1][2] 1978 முதல் 1995 முடிய கலாவத், கொண்டல் மற்றும் விஸ்வதர் சட்டமன்ற தொகுதிகளிலிருந்து குஜராத் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3] 1980களில் பாரதிய ஜனதா கட்சி நிறுவப்பட்டபோது அதன் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1995-இல் குஜராத் மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேசுபாய் படேல், சங்கர்சிங் வகேலா தலைமையில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள், கேசுபாய் படேலுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதனால் சங்கர்சிங் வகேலாவின் ஆதரவு பெற்ற சுரேஷ் மேத்தா முதல்வராகப் பதவி ஏற்றார். 1998 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கேசுபாய் படேல், பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2001-இல் கேசுபாய் படேல் முதல்வர் பதவியை துறந்ததால், நரேந்திர மோதி குஜராத் மாநில முதல்வரானார்.[4][5][6]

2002-இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

கேசுபாய் படேல் 4 ஆகஸ்டு 2012-இல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி குஜராத் பரிவர்த்தன் கட்சியை நிறுவி, 2012-குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு[8] இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் இவரது கட்சி வெற்றி பெற்றது.[9] இவர் தீவிரமான மாரடைப்பு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 29.10.2020 அன்று தனது 92 ஆவது வயதில் மரணமடைந்தார்.[10]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.