விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல், சீனா என்று தம்மை அழைத்துக்கொள்ளும் சீன மக்கள் குடியரசு மற்றும் சீனக் குடியரசு (தாய்வான்) ஆகிய நாடுகளில் வாழும் இனக்குழுக்களை உள்ளடக்குகின்றது.
ஹான் சீனர்களே சீனாவின் மிகப் பெரிய இனக் குழுவினராகும். இவர்கள் சீனாவில் மொத்த மக்கள்தொகையின் 91.5% த்தினராக இருக்கின்றனர்.[1] இது ஏறத்தாழ 120 கோடி ஆகும். இவர்கள் தவிர சீனாவில் அரசினால் தேசிய இனங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 55 இனக் குழுக்கள் உள்ளன. இவர்களின் மக்கள்தொகை ஏறத்தாழ 10.5 கோடி ஆகும். இச் சிறுபான்மைக் குழுக்கள் பெரும்பாலும் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். சில குழுக்கள் நாட்டின் நடுவிலுள்ள உட் பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
முக்கியமான சிறுபான்மை இனக்குழுக்கள் பின்வருமாறு: சுவாங் (16.1 மில்லியன்), மஞ்சு (10.6 மில்லியன்), ஊய் (9.8 மில்லியன்), மியாவோ (8.9 மில்லியன்), உய்குர் (8.3 மில்லியன்), துஜியா (8 மில்லியன்), யி (7.7 மில்லியன்), மங்கோலியர் (5.8 மில்லியன்), திபெத்தியர் (5.4 மில்லியன்), புயேயி (2.9 மில்லியன்), தோங் (2.9 மில்லியன்), யாவோ (2.6 மில்லியன்), கொரியர் (1.9 மில்லியன்), பாயி (1.8 மில்லியன்), ஹானி (1.4 மில்லியன்), கசக்குகள் (1.2 மில்லியன்), லி (1.2 மில்லியன்), டாய் (1.1 மில்லியன்).[2]
மக்கள்தொகைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.[3][4][5][6]
இது தாய்வானிய முதுகுடிகளின் பட்டியலாகும். மக்கள் சீனக் குடியரசு இவர்கள் அனைவரையும் காவோஷான் என்னும் பெயரில் ஒரே இனக்குழுவாக வகைப்படுத்தியுள்ளது. (高山族 : Gāoshān Zú). தாய்வானில் இயங்கும் சீனக் குடியரசு இவற்றுள் 13 குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இக்குழுக்கள் நட்சத்திரக் குறி மூலம் காட்டப்பட்டுள்ளன.[7]
இது மக்கள் சீன அரசால் அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுக்களின் பட்டியல் ஆகும்.[8]ref>Mongush, M. V. (1996). "Tuvans of Mongolia and China". International Journal of Central Asian Studies (1): 225–243.</ref>
ஹாங்காங் மற்றும் மக்காவு என்பன மக்கள் சீனக் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் ஆகும். ஹாங்காங், மக்காவு பகுதிகளின் அரசுகள் மக்கள் சீனக் குடியரசின் இன வகைப்பாட்டைப் பயன்படுத்துவது இல்லை. அத்துடன் மேற்குறிப்பிட்ட வகைப்பாடு ஹாங்காங், மக்காவு பகுதிகளிலுள்ள இனக்குழுக்களைக் கவனத்திற்கு எடுக்கவும் இல்லை. இதனால் அப் பகுதிகளிலுள்ள சிறுபான்மையினரான பிலிப்பினோக்கள், இந்தோனீசியர், ஐரோப்பியர், தெற்காசியர், போத்துக்கீசர், மாக்கானியர்கள் (சீன, போத்துக்கீசக் கலப்பு இனத்தவர்) ஆகியோர் மக்கள் சீனாவின் பட்டியலில் இடம்பெறவில்லை.[9][10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.