சுலலாங்கார்ன் (Chulalongkorn) மேலும் ராஜா ஐந்தாம் ராமா எனப்படும், (ஆட்சித் தலைப்பு: ப்ரா சுலா சோம் கிளாவ் சாவோ யூ ஹுவா) ( 20 செப்டம்பர் 1853 - 23 அக்டோபர் 1910) இவர் சக்ரி வம்சத்தின் கீழ் இரத்தனகோசின் இராச்சியத்தின் (சியாம்) ஐந்தாவது மன்னர் ஆவார். இவர் தனது காலத்தின் சியாமியர்களுக்கு பிரா புத்தா சாவோ லுவாங், (பேரரசர் புத்தர்) என்று அறியப்பட்டார். இவரது ஆட்சி சியாமின் நவீனமயமாக்கல், அரசாங்க மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் பிரித்தானியர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கு பிராந்திய சலுகைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டது. சியாம் மேற்கத்திய விரிவாக்கத்தால் அச்சுறுத்தப்பட்டதால், இவர் தனது கொள்கைகள் மூலமும், செயல்களின் மூலமும் சியாமை காலனித்துவத்திலிருந்து காப்பாற்ற முடிந்தது. [1] இவரது சீர்திருத்தங்கள் அனைத்தும் மேற்கத்திய காலனித்துவத்தின் முகத்தில் சியாமின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டன, இதனால் இவர் பிரா பியா மகாரத் ( மிகப் பெரிய அன்பான மன்னர்) என்ற பெயரைப் பெற்றார்.

விரைவான உண்மைகள் சுலலாங்கொர்ன், சியாமின் அரசன் ...
சுலலாங்கொர்ன்
ராஜா ஐந்தாம் ராமா
Thumb
சியாமின் அரசன்
ஆட்சிக்காலம்1 அக்டோபர் 1868 – 23 அக்டோபர் 1910
தாய் மன்னராக முடிசூட்டப்பட்டார்11 நவம்பர் 1868 (1வது)
16 நவம்பர் 1873 (2வது)
முன்னையவர்மோங்குத் (நான்காம் ராமா)
பின்னையவர்வஜிராவுத் (ஆறாம் ராமா)
அரசப் பிரதிநிதிஎஸ்.ஐ.சூரியாவோங்ஸ் (1868-1873)
சாவோபா போங்ஸ்ரி (1897)
வஜிராவுத் (1907)
முன் அரண்மனைபோவன் விச்சிச்சன்(1868–1885)
பிறப்பு(1853-09-20)20 செப்டம்பர் 1853
பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து
இறப்பு23 அக்டோபர் 1910(1910-10-23) (அகவை 57)
ஆம்போர்ன் சாத்தான் குடியிருப்பு மண்டபம்
துசித் அரண்மனை, பேங்காக், தாய்லாந்து
துணைவர்சுனந்தா குமாரிரதானா
சுகுமல்மார்ஸ்ரி
சவங் வதனா
சாவோபாபோங்ஸ்ரி மற்றும் 32 பிற மனைவிகள் மற்றும் காமக்கிழத்திகள் (மொத்தம் 116)
குழந்தைகளின்
#Family
33 மகன்களும் 44 மகள்களும்
மரபுசக்ரி வம்சம்
தந்தைமோங்குத் (நான்காம் ராமா)
தாய்தெபிசிரிந்திரா
மதம்பௌத்தம்
கையொப்பம்Thumb
மூடு

ஆரம்ப கால வாழ்க்கை

Thumb
மேற்கத்திய பாணி அரச சீருடையில் இளவரசர் சுலலாங்கொர்னுடன் அரசர் மோங்குத்
Thumb
தனது இளம் வயதில் இளவரசர் சுலலாங்கொர்ன்

இவர் 1853 செப்டம்பர் 20 அன்று அரசர் மோங்குத், ராணி தெப்சிரிந்திரா ஆகியோருக்கு சுலலாங்கொர்ன் என்ற பெயரில் பிறந்தார். 1861 ஆம் ஆண்டில், இவர் குரோம்மமுன் பிகானேசுவான் சூரசங்கட் என்ற பட்டப்பெயரில் நியமிக்கப்பட்டார். இவரது தந்தை இவருக்கு அண்ணா லியோனோவன்ஸ் போன்ற ஐரோப்பிய ஆசிரியர்களின் அறிவுறுத்தல் உட்பட ஒரு பரந்த கல்வியைக் கொடுத்தார். 1866 ஆம் ஆண்டில், அரச பாரம்பரியத்தின் படி வாட் பாவோனிவெட்டில் ஆறு மாதங்கள் புதிய துறவியாக ஆனார். 1867 இல் இவர் தனது மதச்சார்பற்ற வாழ்க்கைக்கு திரும்பியதும், இவர் குரோமகுன் பினிட் பிரச்சனாத் என்ற பட்டப்பெயரில் நியமிக்கப்பட்டார்.

1867 ஆம் ஆண்டில், மன்னர் மோங்குத் ஹுவா ஹின் நகருக்கு தெற்கே மலாய் தீபகற்பத்திற்கு ஆகத்து 18, 1868 இல் சூரிய கிரகணம் குறித்த தனது கணக்கீடுகளை சரிபார்க்க ஒரு பயணம் மேற்கொண்டார். [2] அங்கு தந்தை, மகன் ஆகிய இருவரும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டனர். 1 அக்டோபர் 1868 இல் மோங்க்குட் இறந்தார். 15 வயதான இளவரசனும் இறந்துவிடுவார் என்று கருதி, மோங்குத் மன்னர் தனது மரணக் கட்டிலில் இவ்வாறு எழுதினார், "என் சகோதரர், என் மகன், என் பேரன், நீங்கள் அனைவரும் மூத்த அதிகாரிகள் எவரேனும் நம் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தால் எனது சிம்மாசனத்திற்கு, உங்கள் சொந்த விருப்பப்படி தேர்வு செய்யுங்கள்." அன்றைய மிக சக்திவாய்ந்த அரசாங்க அதிகாரியான எஸ்.ஐ.சூரியாவோங்ஸே, இவரை சிம்மாசனத்தில் அமரவைத்து, அவர் நிர்வாகத்தை நாட்டை நிர்வகித்தார். இவரது உடல்நிலை மேம்பட்டது. மேலும் இவர் பொது விவகாரங்களில் பயிற்றுவிக்கப்பட்டார். இளவரசனுக்கு முதல் முடிசூட்டு விழா 11 நவம்பர் 1868 அன்று நடைபெற்றது.

இளம் வயதில் இவர் ஒரு உற்சாகமான சீர்திருத்தவாதியாக இருந்தார். பிரித்தானிய காலனிகளின் நிர்வாகத்தைப் தெரிந்து கொள்வதற்காக 1870 இல் சிங்கப்பூருக்கும், சாவகத்தீவுக்கும் 1872 இல் பிரித்தானிய இந்தியாவிற்கும் வருகை புரிந்தார். இவர் கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய இடங்களுக்குச் சென்றார். இந்த பயணம் சியாமின் நவீனமயமாக்கலுக்கான தனது பிற்கால யோசனைகளுக்கு ஒரு ஆதாரமாக இருந்தது. நவம்பர் 16, 1873 இல் இவர் ராஜா ஐந்தாம் ராமா என முடிசூட்டப்பட்டார். [1]

அரசப் பிரதிநிதியாக, எஸ்.ஐ.சூரியாவோங்ஸே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தார். அவர் மன்னர் மொங்க்குட்டின் திட்டங்களைத் தொடர்ந்தார். படுங் குருன்காசெம், டாம்னியூன் சாதுவாக் போன்ற பல முக்கியமான கால்வாய்கள் தோண்டப்படுவதையும், சரோயன் குரூங், சிலோம் போன்ற சாலைகளை அமைப்பதையும் அவர் மேற்பார்வையிட்டார். அவர் தாய் இலக்கியம் மற்றும் நிகழ்த்து கலைகளின் புரவலராகவும் இருந்தார்.

ஆரம்பகால ஆட்சி

Thumb
நவம்பர் 16, 1873 இல் தனது இரண்டாவது முடிசூட்டு விழாவுக்குப் பிறகு மன்னர் சுலலாங்கொர்ன்.

எஸ்.ஐ. சூரியாவோன்ஸ் ஆட்சியின் முடிவில், அவர் சோம்டெட் சாவோ பிராயாவாக உயர்த்தப்பட்டார். இது ஒரு உன்னதமானவர் அடையக்கூடிய மிக உயர்ந்த தலைப்பாகும். எஸ்.ஐ.சூரியாவோங்ஸே 19 ஆம் நூற்றாண்டின் மிக சக்திவாய்ந்த உன்னதமானவராக இருந்தார். அவரது குடும்பமான, பன்னாக், பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சக்திவாய்ந்ததாகும். முதலாம் ராமரின் ஆட்சியில் இருந்து இது சியாமிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது. [3]

ஊழல் வரி சேகரிப்பாளர்களை மாற்றுவதற்காக வரி வசூலுக்கு மட்டுமே பொறுப்பான "ஆடிட்டரி ஆபிஸ்" ஐ நிறுவுவதே சுலலாங்கொர்னின் முதல் சீர்திருத்தமாகும். வரி வசூலிப்பவர்கள் பல்வேறு பிரபுக்களின் கீழ் இருந்ததால், அவர்களின் செல்வத்தின் ஆதாரமாக இருந்ததால், இந்த சீர்திருத்தம் பிரபுக்களிடையே, குறிப்பாக முன்னணி அரண்மனையிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. மன்னர் மொங்க்குட்டின் காலத்திலிருந்து, முன்னணி அரண்மனை ஒரு "இரண்டாவது ராஜா" க்கு சமமானதாக இருந்தது. தேசிய வருவாயில் மூன்றில் ஒரு பங்கு அதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பேரரசு சியாமின் எதிரியாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில், முன்னணி அரண்மனையின் இளவரசர் யிங்யோட் பல பிரிட்டிசாருடன் நட்புறவைக் கொண்டிருந்தார்.

1874 ஆம் ஆண்டில், சுலலாங்கொர்ன் மாநில குழுவை ஒரு சட்டமன்றக் குழுவாகவும், ஒரு தனியார் சபையை பிரிட்டிசு கோமறை மன்றத்தின் அடிப்படையில் அவரது தனிப்பட்ட ஆலோசனைக் குழுவாகவும் நிறுவினார். சபை உறுப்பினர்கள் மன்னரால் நியமிக்கப்பட்டனர்.

குடும்பம்

மன்னர் சுலலாங்கொர்ன் தனது வாழ்நாளில் 92 மனைவிகளைக் கொண்டிருந்தார். அவர்கள் மூலம் உயிர் பிழைத்த 77 குழந்தைகள் இருந்தனர். [4]

மரணமும் மரபும்

Thumb
1911 ஆம் ஆண்டில் பாங்காக்கின் சனம் லுவாங்கில் மன்னர் சுலலாங்கொர்னின் இறுதி சடங்கு.

சுலலாங்கொர்ன்சிறுநீரக நோய் 1910 அக்டோபர் 23 அன்று இறந்தார்

மேற்கோள்கள்

மேலும் காண்க

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.