From Wikipedia, the free encyclopedia
பபானிபூர் (Bhabanipur) (வங்காள மொழி: ভবানীপুর বিধানসভা কেন্দ্র) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலிருக்கும் கொல்கத்தா நாடாளுமன்ற தொகுதிக்குள் 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] தொகுதி மறுசீரமைப்பின்படி காலிகட் தொகுதி இல்லாமற்போனது. பபானிபூர் சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரசு தலைவர் மம்தா பானர்ஜி 77.46 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். [2]
பபானிபூர் சட்டமன்றத் தொகுதியில் கொல்கத்தா மாநகராட்சியை சார்ந்த 63, 70, 71, 72, 73, 74, 77 மற்றும் 82 ஆகிய வார்டுகள் உள்ளன. [3]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | மம்தா பானர்ஜி | திரிணாமுல் காங்கிரசு | 65520 [4] | 47.66 % |
2011 (இடைத் தேர்தல்) | மம்தா பானர்ஜி | திரிணாமுல் காங்கிரசு | 73,635 | 77.46 % |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.