From Wikipedia, the free encyclopedia
பிளிமத் (Plymouth) மேற்கிந்திய தீவுகளிலுள்ள சிறிய அண்டிலிசு தொடரின் லீவர்டு தீவுகளில் அமைந்துள்ள பிரித்தானிய கடல் கடந்த மண்டலமான மொன்செராட்டின் தலைநகரமாக விளங்கிய நகரமாகும். 1995 இல், இங்கு ஏற்பட்ட அதிகளவான எரிமலைச் சீற்றங்களால் இந்நகரம் கைவிடப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, தீவின் ஒரே நுழைவிடமாக இவ்விடம் இருந்தது. தற்போதும் மொன்செராட்டின் சட்டப்படியான தலைநகரமாக பிளிமத் உள்ளது.
பிளிமத் | |
---|---|
மொன்செராட்டில் பிளிமத்தின் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
கடல் கடந்த மண்டலம் | மொன்செராட் |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 0 (4,000 inhabitants before evacuation as a result of volcanic eruption) |
நேர வலயம் | ஒசநே-4 (அட்லாண்டிக்) |
1995 ஆம் ஆண்டு ஜூலை மாதத் துவக்கத்தில், மொன்செராட்டின் சொஃபிரியர் எரிமலைச் சீற்றம் பெரியளவில் பலமுறை தொடர்ந்து நிகழ்ந்தது. தலைநகரம் பிளிமத் உட்பட்ட தெற்கு மொன்செராட்டின் பல பகுதிகள் சாம்பற் பொழிவுக்குகாளானது. இதனால் பிளிமத் நகரம் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆகஸ்டு 21, 1995 இல் சாம்பற்பொழிவு தொடர்ந்தது. அதே ஆண்டு திசம்பரில் பாதுகாப்பிற்காக, பிளிமத் நகர மக்கள் பாதுகாப்பிற்காக அந்நகரிலிருந்து அகற்றப்பட்டனர். சில மாதங்கள் கழித்து மீண்டும் மக்கள் அந்நகருக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஜூன் 25, 1997 இல் பேரளவில் நிகழ்ந்த எரிமலைப்பாறை எழுச்சியால் மக்கள் மீண்டும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பலமுறைத் தொடர்ந்த சீற்றங்களால் 1.4 மீட்டர்கள் (4.6 அடி) ஆழத்திற்குப் புதைந்து நகரின் 80% பகுதி அழிந்து போனது. எரிமலைச் சீற்றத்தின் பாதிப்பிலிருந்து நகரத்தை மீட்டெடுக்க இயலாத நிலையில் அங்கு மக்கள் வாழ முடியவில்லை[1] பிளிமத் நகரம் கைவிடப்பட்டு, தொடர் எரிமலை வெடிப்புகளின் காரத்தால், தீவின் தெற்குப்பகுதியின் பாதியளவு நீக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. சட்டபூர்வமான தலைநகரமாக பிளிமத் நகரம் இருந்தபோதும், தீவின் அரசாங்கம் பிராதெக்கு மாற்றப்பட்டது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பிளிமத் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32 (90) |
33 (91) |
34 (93) |
34 (93) |
36 (97) |
37 (99) |
37 (99) |
37 (99) |
36 (97) |
34 (93) |
37 (99) |
33 (91) |
37 (99) |
உயர் சராசரி °C (°F) | 29 (84) |
30 (86) |
31 (88) |
31 (88) |
32 (90) |
32 (90) |
33 (91) |
33 (91) |
32 (90) |
31 (88) |
30 (86) |
29 (84) |
31.1 (88) |
தாழ் சராசரி °C (°F) | 23 (73) |
23 (73) |
24 (75) |
24 (75) |
24 (75) |
25 (77) |
25 (77) |
25 (77) |
24 (75) |
24 (75) |
24 (75) |
23 (73) |
24 (75.2) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 17 (63) |
18 (64) |
18 (64) |
18 (64) |
19 (66) |
21 (70) |
22 (72) |
22 (72) |
21 (70) |
19 (66) |
19 (66) |
18 (64) |
17 (63) |
பொழிவு mm (inches) | 122 (4.8) |
86 (3.39) |
112 (4.41) |
89 (3.5) |
97 (3.82) |
112 (4.41) |
155 (6.1) |
183 (7.2) |
168 (6.61) |
196 (7.72) |
180 (7.09) |
140 (5.51) |
1,640 (64.57) |
ஆதாரம்: BBC Weather [2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.