பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம் (Women's Test cricket) பெண்கள் துடுப்பாட்ட அணிகளால் விளையாடப்படும் அதிக நிறைவுகள் கொண்ட துடுப்பாட்ட வடிவம் ஆகும். இது ஆண்களால் விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத்தினை ஒத்தது.இது நான்கு ஆட்டப் பகுதிகளைக் கொண்டது. குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு மேல் விளையாடப்படும் துடுப்பாட்ட வடிவம் ஆகும். ஆனால் நடுவர் மற்றும் மைதான அளவு ஆகியவற்றில் ஆண்களுக்கான துடுப்பாட்ட வடிவத்தில் இருந்து சற்று மாறுபடுகிறது. 1934 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலிய அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெற்றது. இதில் இதில் இங்கிலாந்து ஒன்பது இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [1]

நாடுகள்

பத்து பெண்கள் அணிகள் இதுவரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளது.1934-35 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த மூன்று அணிகளும் குறைந்தது 45 போட்டிகளில் விளையாடியுள்ளன. தென்னாப்பிரிக்கா அணி1960 இல் முதல் போட்டியில் விளையாடியது. [2] இருப்பினும், நாட்டின் நிறவெறி கொள்கை காரணமாக சர்வதேச விளையாட்டிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டதன் காரணமாக [3] அவர்கள் பதினொரு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். இது இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளை விட குறைவான போட்டி எண்ணிக்கை ஆகும்.பாகிஸ்தான், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் இலங்கை தேர்வு கிய நான்கு அணிகளும் ஐந்துக்கும் குறைவான போட்டிகளில் போட்டியிட்டன.

மேலதிகத் தகவல்கள் அணி, முதலில் ...
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணிகள்
அணி முதலில் சமீபத்தியது போட்டிகள்
 ஆத்திரேலியா 1934 2019 74
 இங்கிலாந்து 1934 2019 95
 இந்தியா 1976 2014 36
 அயர்லாந்து 2000 2000 1
 நெதர்லாந்து 2007 2007 1
 நியூசிலாந்து 1935 2004 45
 பாக்கித்தான் 1998 2004 3
 தென்னாப்பிரிக்கா 1960 2014 12
 இலங்கை 1998 1998 1
 மேற்கிந்தியத் தீவுகள் 1976 2004 12
மூடு

மேலும் காண்க

சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.