கெலாங் பாத்தா
மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
கெலாங் பாத்தா, (மலாய்: Gelang Patah; ஆங்கிலம்: Gelang Patah; சீனம்: 振林山); ஜாவி: ڬلڠ ڤاته) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கெலாங் பாத்தா, நாடு ...
கெலாங் பாத்தா | |
---|---|
Gelang Patah | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1.4491332°N 103.5899353°E / 1.4491332; 103.5899353 | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
அரசு | |
• நகரண்மைக் கழகம் | இசுகந்தர் புத்திரி மாநகராட்சி |
• தலைவர் | சாலேவுடின் அசான் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 81550 |
மலேசியத் தொலைபேசி எண் | +607 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
மூடு
கெலாங் பாத்தாவிற்குத் தனி அடையாளங்கள் உள்ளன. மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம்; மற்றும் தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகம் ஆகியவை மிக முக்கியமான அடையாளங்கள். இரண்டுமே புவியியல் அடிப்படையில் வரலாறு படைத்தவை.
கெலாங் பாத்தா, அதன் கடல் உணவு உணவகங்களுக்கும்; ஜொகூர் மாநிலத்திலேயே பிரபலமான "கெலாங் பாத்தா வறுவல் மீன்" உணவிற்கும் பிரபலமானது. உள்ளூர் மக்கள் பலருக்கும் சிங்கப்பூர் மக்கள் பலருக்கும் உணவு மையமாகவும் விளங்கி வருகிறது.