ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா (Heracleopolis Magna or Heracleopolis) மேல் எகிப்தில் அமைந்த பண்டைய நகரம் மற்றும் தொல்லியல் களம் ஆகும். இது தற்கால் எகிப்தின் பெனி சூயப் ஆளுநகரத்தில் உள்ளது. [1] 9-ஆம் வம்சம், 10-ஆம் வம்சம் மற்றும் 23-ஆம் வம்சத்தவர்களுக்கு ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா தலைநகரமாக இருந்தது.

விரைவான உண்மைகள் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா Ϩⲛⲏⲥ, மாற்றுப் பெயர் ...
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
Ϩⲛⲏⲥ
Thumb
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
Shown within Egypt
மாற்றுப் பெயர்ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
இருப்பிடம்பெனி சூயப் ஆளுநகரம், எகிப்து
ஆயத்தொலைகள்29°5′8″N 30°56′4″E
வகைபண்டைய நகரம்
மூடு

பழைய எகிப்து இராச்சியத்தில்

Thumb
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஈமக்கிரியையின் போது உணவு படைகக்ப்பட்ட மட்பாண்டம், கிமு 2160 - கிமு 1990

கிமு 2181 முதல் கிமு 2055 முடிய எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது இந்நகரம் புகழுடன் விளங்கியது.[2] பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) சீர்குழைந்த போது பண்டைய எகிப்து மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து என இரண்டாகப் பிரிந்தது. இதனால் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் கீழ் எகிப்தின் முதன்மை நகரமாக விளங்கியது.[1] எகிப்தின் ஒன்பதாம் வம்சம் மற்றும் பத்தாம் வம்சத்தவர்கள் (கிமு2160–2025) ஆட்சிக் காலத்தில் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் அரசியல் அதிகார மையமாக விளங்கியது. [1] ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவ்வம்சத்தவர்கள், தீபையை தலைநகராகக்கொண்ட மேல் எகிப்திய வம்சத்தவர்களுடன் பிணக்கு கொண்டனர். [2]

எகிப்தின் மத்தியகால இராச்சியத்தில் (கிமு 2055–1650)

Thumb
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத் தொல்லியல் அகழாய்வில் 19-ஆம் வம்ச பார்வோனின் கல்லறையில் கண்டெடுத்த துணி சுற்றப்பட்ட மம்மியின் சிற்பம்

எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்திற்கும், மத்திய கால இராச்சியத்தின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் எகிப்திய சமயத்தின் மையமாக விளங்கியது. ஹெரிசாப் கடவுளை வழிபட்டதுடன், அக்கடவுளுக்கு கோயில்கள் கட்டப்பட்டது. [2] மத்திய கால இராச்சியத்தை ஆண்ட 11-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப், ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தை கைப்பற்றி, அதன ஆட்சியாளர்களையும் வென்றார்.[3]

மூன்றாம் இடைநிலைக் காலத்தில் (கிமு 1069–747)

எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் (கிமு 1069–747) போது ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் எழுச்சியடைந்து மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. இந்நகரம் சமயம், அரசியல் ஆகியவைகளின் மையமாக திகழ்ந்தது.[2]

தாலமி பேரரசில் எகிப்து (கிமு 322–30)

கிரேக்கர்களின் தாலமி பேரரசில் (கிமு 332–30), பண்டைய எகிப்து இருந்த போது, ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் முக்கிய பண்பாட்டு மற்றும் சமய மையமாக விளங்கியது. எகிப்தினை ஆண்ட கிரேக்கர்கள் தங்களது சமயக் கடவுள்களுடன், எகிப்தியக் கடவுள்களுடன் ஒப்பிட்டு அறிந்தனர். [2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.