அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
இலங்கையில் இயங்கிய/இயங்கும் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (All Ceylon Tamil Congress) என்பது இலங்கையின் மிகப் பழமையான தமிழ் அரசியல் கட்சி ஆகும்.
Remove ads
வரலாறு
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியை ஜி. ஜி. பொன்னம்பலம் 1944 ஆம் ஆண்டில் தொடங்கினார். பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தை (பெரும்பான்மை சிங்களவர்களுக்கு 50%, ஏனைய அனைத்து இனக்குழுக்களுக்கும் 50%) கோரினார்.[1] அன்றைய பிரித்தானிய ஆளுநர் சோல்பரி பிரபு "மக்களாட்சியைக் கேலி செய்வது" என்று இக்கோரிக்கையை நிராகரித்தார். காங்கிரசுக் கட்சி அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைக்க முடிவு செய்ததால், சா. ஜே. வே. செல்வநாயகம் இக்கட்சியில் இருந்து 1940 ஆம் ஆண்டில் விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். காங்கிரசின் கூட்டாளியான ஐக்கிய தேசியக் கட்சி இருமொழிக் கொள்கைகளிலிருந்து சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்தபோது தமிழ்க் காங்கிரசுக் கட்சி பெருமளவில் மதிப்பிழந்தது. 1976 இல் தமிழ்க் காங்கிரசும் தமிழரசுக் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கின.
2001 தேர்தல்களுக்கு முன்னதாக, விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ்க் காங்கிரசு இணைந்தது. 2004 தேர்தலில் ததேகூ நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில் 22 இடங்களை வென்றது. 2010 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு ததேகூ இலிருந்து வெளியேறி, புதிய அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தொடங்கியது.
Remove ads
தலைவர்கள்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவர்களாக இருந்தவர்கள்:
தேர்தல் வரலாறு
1947 நாடாளுமன்றத் தேர்தல்
இலங்கை விடுதலை பெற்று நடைபெற்ற முதலாவது 1947 தேர்தலில், தமிழ்க் காங்கிரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 95 இடங்களில் 7 ஐக் கைப்பற்றியது.
1952 நாடாளுமன்றத் தேர்தல்
1952 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 95 இடங்களில் 4 ஐக் கைப்பற்றியது.
1956 நாடாளுமன்றத் தேர்தல்
1956 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு ஒரு இடத்தில் மட்டும் போட்டியிட்டது, தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு, 8,914 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]
1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்
மார்ச் 1960 தேர்தலில் தமிழ்க் காங்கிரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 151 இடங்களில் 1 இடத்தை மட்டும் கைப்பற்றியது.
1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்
சூலை 1960 தேர்தலில் தமிழ்க் காங்கிரசுக் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 151 இடங்களில் 1 இடத்தை மட்டும் கைப்பற்றியது.[6] மு. சிவசிதம்பரம் உடுப்பிட்டித் தொகுதியில் போட்டியிட்டு 9,080 வாக்குகள் பெற்று மீண்டும் தெரிவானார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads