அசங்கர்

From Wikipedia, the free encyclopedia

அசங்கர்
Remove ads

அசங்கர் (Asanga) தனது உடன் பிறந்தவரான வசுபந்துவுடன் இணைந்து யோகசாரம் எனும் மகாயான பௌத்த விஞ்ஞானவாத தத்துவப் பிரிவை நிறுவியவர். வசுபந்துவுடன் இணைந்து திரிபிடகத்தின் அபிதம்மத்தை விரிவாக விளக்கிய பௌத்த தத்துவ ஆசிரியர்.

Thumb
அசங்கரின் மரச்சிற்பம், ஜப்பான், ஆண்டு 1208
Thumb
அசங்கரை நோக்கும் மைத்திரேயர் - திபெத்திய பௌத்த சித்தரிப்பு

பண்டைய காந்தார நாட்டின் புருஷபுரம் எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள பெசாவர் நகரத்தில் சத்திரிய தந்தைக்கும் வேதிய தாய்க்கும் கி பி நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர்.[1] துவக்கத்தில் சர்வாஸ்திவாத பௌத்தப் பிரிவில் இருந்தவர். பின்னர் மகாயான பௌத்தத்தில் இணைந்தவர்.[2][3]

Remove ads

படைப்புகள்

அசங்கர் யோகசார தத்துவத்தை விளக்க யோகசார-பூமி-சாத்திரம் மற்றும் மகாயானசம்கிரகம் எனும் நூல்களை எழுதியுள்ளார்.[4] மேலும் அபிதர்ம-சமுச்சயம் எனும் நூலையும் எழுதியுள்ளார்.[5]

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads