அசா செயா மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

அசா செயா மாவட்டம்map
Remove ads

அசா செயா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Asajaya; ஆங்கிலம்: Asajaya District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அசா செயா நகரம்.

விரைவான உண்மைகள் அசா செயா மாவட்டம், நாடு ...
Thumb
சரவாக் மாநிலத்தில் அசா ஜெயா மாவட்டத்தின் அமைவு

அசா ஜெயா முன்பு நோனோ (Nono) என்று அழைக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு முதல் கூச்சிங் பிரிவின் கீழ் ஒரு துணை மாவட்டமாக இருந்தது.

1993-ஆம் ஆண்டு முதல், புதிதாக உருவாக்கப்பட்ட சமரகான் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அசா செயா என மறுபெயரிடப்பட்டது. 1999 டிசம்பர் 31-ஆம் தேதி அசா ஜெயா ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

Remove ads

சமரகான் பிரிவு

சமரகான் பிரிவு சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 1986 சூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,967.4 சதுர கி.மீ.[2]

சமரகான் பிரிவில் நான்கு நிர்வாக மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் அசாஜெயா மாவட்டமும் ஒன்றாகும்.

Remove ads

கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்

சமரகான் மாவட்டம்; அசா ஜெயா (Asajaya) மாவட்டம்; சாடோங் ஜெயா (Sadong Jaya) துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[3]

மக்கள் தொகை

மேலதிகத் தகவல்கள் மொத்தம் மக்கள் தொகை, மலாய்க்காரர் ...

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads