சமரகான் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமரகான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Samarahan; ஆங்கிலம்: Samarahan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோத்தா சமரகான் நகரம்.[1][2]

சமரகான் பிரிவில் நான்கு நிர்வாக மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் சமரகான் மாவட்டமும் ஒன்றாகும்.
- சமரகான் மாவட்டம் - Samarahan District
- அசா செயா மாவட்டம் - Asajaya District
- செரியான் மாவட்டம் - Serian District
- சிமுஞ்சான் மாவட்டம் - Simunjan District
Remove ads
பொது
சமரகான் பிரிவின் நான்கு நிர்வாக மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 246,782 ஆகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி, ஒரு புதிய பிரிவை உருவாக்குவதற்காக செரியான் மாவட்டம், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது.
சமரகான் பிரிவின் மக்கள்தொகை கலாசார அடிப்படையில் ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் பிடாயூ, இபான், மலாய்க்காரர், சீனர் இனக்குழுவினர் மிகுதியாக வாழ்கின்றனர்.
கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்
சமரகான் மாவட்டம்; அசா ஜெயா (Asajaya) மாவட்டம்; சாடோங் ஜெயா (Sadong Jaya) துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[3]
2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, சமரகான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12,724 ஆகும். மேலும் கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து நகரங்களின் மக்கள் தொகை 85,495 ஆகும்.[4]
கோத்தா சமரகான்
1983 ஆகஸ்டு 19-ஆம் தேதி முவாரா துவாங் எனும் துணை மாவட்டம் முழு மாவட்ட நிலைக்குத் தகுதி உயர்த்தப் பட்டது. அதன் பின்னர் சமரகான் மாவட்டம் என புதுப் பெயரில் மாற்றம் கண்டது.
மாவட்டத் தகுதி உயர்வுக்கு ஏற்ற வகையில், சமரகான் நகர்ப் பகுதியில் இருந்த முவாரா துவாங் சந்தையும் (Muara Tuang bazaar) ஒரு நகரம் எனும் தகுதிக்கு நிலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் கோத்தா சமரகான் என்று இப்போது அனைவராலும் அறியப் படுகிறது.
பாத்தாங் சமரகான்
சமரகான் மாவட்டத்தில், கோத்தா சமரகான் நகரம் மிக முக்கியமான நகரம். கோத்தா சமரகான் என்பது மலாய் மொழியில் சமரகான் நகரம் என்று பொருள்படும்.[5] சமரகான் மாவட்டத்தின் பெயரால் பெயரிடப்பட்டது.
இந்த நகரம் தொடக்கக் காலக் குடியேற்றத்தின் மையப் புள்ளியாக இருந்தது. அப்போது ஒரு முக்கிய நதியாக விளங்கிய பாத்தாங் சமரகான் எனும் பெயரில் இந்த நகரமும் அழைக்கப் படுகிறது.
Remove ads
சமரகான் மாவட்டக் காட்சியகம்
- யுனிமாஸ் பல்கலைக்கழகம் 1
- அசா ஜெயா பூங்கா
- நகராண்மைக் கழகம்
- சிமுஞ்சான் கடைவீதி
- யுனிமாஸ் பல்கலைக்கழகம் 2
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads