அண்ணா நகர் மேற்கு
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அண்ணா நகர் மேற்கு (ஆங்கிலம்: Anna Nagar West) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது அண்ணா நகரின் மேற்குப் பகுதியாகும். இந்தப் பகுதியானது, சென்னை நகரத்திற்குள் ஒரு முக்கிய போக்குவரத்து மற்றும் குடியிருப்பு மையமாக செயல்படுகிறது. இந்த நகரம் மெட்ரோ ரயில் அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. மில்லேனியம் பூங்கா இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பூங்காவாகும். இங்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து நிலையம் உள்ளது.
Remove ads
வரலாறு
1968-ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள, அண்ணா நகர் மேற்கு ஒரு புறநகர் கிராமமாக இருந்தது.[3] பின்னர் இந்தக் கிராமம் குடியிருப்பு இடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அகலமான சாலைகள், பள்ளி மண்டலங்கள், ஒரு பேருந்து நிலையம் மற்றும் பெரிய பூங்காக்களுடன் திட்டமிடப்பட்டது. அண்ணா நகர் மேற்கின் எல்லைகளாக பூங்கா ரோடு, அண்ணா நகர் ஆறாவது அவென்யூ, உள்வட்ட சாலை, அம்பத்தூர் மெயின் ரோடு மற்றும் எம். டி. எச். சாலை ஆகியவை உள்ளன. 1990கள் மற்றும் 2000களில் இந்தப் பகுதி மகத்தான வளர்ச்சியைக் கண்டது. இப்போது பல அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் வசிக்கின்றனர். இது சென்னையில் ஒரு பிரதான குடியிருப்பு இடமாகக் கருதப்படுகிறது.[4]
Remove ads
அமைவிடம்
இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பாடி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு போன்ற பகுதிகள் அண்ணா நகர் மேற்கை சுற்றி அமைந்துள்ளன. அண்ணா நகரில் ஒரு தொடருந்து நிலையமும் அமைந்துள்ளது.
Remove ads
போக்குவரத்து
சாலை
அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையம், உள் வட்டச் சாலையில் அமைந்துள்ளது. இது சென்னையின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும், இது 1973-ஆம் ஆண்டில் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தால் (பி.டி.சி) கட்டப்பட்டது. இதன் குறியீடு "ANJ" ஆகும். இந்த நிலையத்தில் சுமார் 232 பேருந்துகள் உள்ளன, அவற்றில் 213 தினசரி பயன்படுத்தப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தை தினமும் சுமார் 50,000 பேர் பயன்படுத்துகின்றனர்.
தொடருந்து
அண்ணா நகரில் தொடருந்து நிலையம் 2003-இல் திறக்கப்பட்டது. இது வில்லிவாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 3.09 கிலோமீட்டர் (1.92 மைல்) தொடருந்து பாதை அண்ணா நகரை திருவள்ளூர் - சென்னை புறநகர் பாதையுடன் இணைக்கிறது. அண்ணா நகர் மேற்குக்கு அருகிலுள்ள சென்னை மெட்ரோ நிலையம், திருமங்கலம் மெட்ரோ நிலையம் ஆகும்.
2003 மற்றும் 2007-க்கு இடையில், ஐந்து புறநகர் தொடருந்துகள் அண்ணா நகரில் இருந்து வில்லிவாக்கம் வழியாக சென்னைக் கடற்கரைக்கு ஓடின. பாடி சந்திப்பு கட்டுமானத்திற்காக, இந்த நிலையம் 2007-இல் மூடப்பட்டது. இருப்பினும், 2009-ஆம் ஆண்டில் சந்தி முடிந்தபின்னர், குறைந்த ஆதரவு காரணமாக நிலையம் மூடப்பட்டது.[5][6]
பள்ளிகள்
அண்ணா நகர் மேற்கு பகுதியில் காணப்படும் பாடசாலைகளில் சில:
- SBOA மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளி, சென்னை
- சி. எஸ். ஐ எவர்ட் மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளி, சென்னை
- பிரித்தானிய பள்ளி
- லியோ மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளி
- ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- வித்வத்வா சர்வதேச பள்ளி
- மேரி கிளப்வாலா ஜாதவ் சிறப்பு உயர்நிலைப்பள்ளி
- சின்மயா வித்யாலயா
- கேந்திரிய வித்யாலயா
- ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி
Remove ads
மருத்துவமனைகள்
அண்ணா நகர் மேற்கு பகுதியில் காணப்படும் மருத்துவமனைகளில் சில:
- மெட்ராஸ் இயற்கை மருத்துவம் & சித்தா மருத்துவமனை
- சில்கி லேசர் ஆராய்ச்சி நிறுவனம்
- KKR ENT மருத்துவமனை
- ஸ்ரீதேவி மருத்துவமனை
- வீ கேர் மருத்துவமனை
- போன் & ஜாயின்ட் மருத்துவமனை
- சுந்தரம் மெடிக்கல் மருத்துவமனை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads