அந்தகாசூரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்தகாசூரன், (சமசுகிருதம்: अन्धक), இந்து தொன்மவியலின்படி, அசுரன் ஆவார். பார்வதியைக் கவர்ந்து சென்ற அந்தகாசூரனைச் சிவபெருமான் வதைத்தார்.[1][2][3]
சிவபெருமான், அந்தாசூரனை வதைத்த வரலாறு மச்ச புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம் மற்றும் சிவபுராணங்களில் விளக்கப்பட்டுள்ளது.[4] சில சாத்திரங்கள் அந்தகாசூரன் ஆயிரம் தலைகள் கொண்டவனாகவும், இரண்டாயிரம் கைகள், கால்கள், கண்கள் கொண்டவனாகவும் கருதப்படுகிறார்.[5]
Remove ads
அந்தகாசூரனின் கதை

சிவபுராணத்தில், சிவபெருமான மேரு மலையில் தியானத்திருக்கையில், பார்வதி தேவி விளையாட்டாகத் தன் கைகளைக் கொண்டு சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் அண்ட சராசரமே இருளில் மூழ்கியது. இதனைக் கண்டு பயந்த பார்வதி தேவியின் கைகளில் வடிந்த வேர்வை நீர் மூலம், கருநிறம் கொண்ட, குரூரமான, கண் பார்வையற்று பிறந்ததால், அக்குழுந்தைக்கு அந்தகாசூரன் எனும் பெயரிடபப்ட்டது.
சிவபெருமான், பார்வையற்ற குழந்தை அந்தகாசூரனைக் குழந்தைப் பேறு அற்ற அசுரன் இரணியாட்சனிடம் வளர்க்க ஒப்படைத்தார். ஆண்டுகள் பல கடந்த பின், இரணியாட்சனின் மறைவிற்குப் பிறகு, அந்தகாசூரன் அசுரர்களின் மன்னரானர். பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்த அந்தகாசூரன், தவப்பயனாகக் கண்கள் பார்வை பெற்றது. இறுதியில் சிவபெருமானால் அழிக்கப்படுவாய் எனப் பிரம்மா கூறி மறைந்தார்.
தவம் முடித்து நாடு திரும்பிய அந்தாசூரன், அசுரப் படைகளுடன் இந்திரன் முதலான தேவர்களை வென்று மூவுலகங்களை வென்றார்.[6]
இறுதியில் மேரு மலைச் சென்று, தியான நிலையிலிருந்த சிவபெருமானின் அருகில் இருந்த பார்வதி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றார். சிவகணங்கள் அசுரப்படைகளைக் கொன்றது. விஷ்ணு அந்தகாசூரனின் தலையைக் கொய்தாலும், அதன் வழியாக விழுந்த குருதியின் மூலம் புதிய புதிய அந்தகாசூரர்கள் தோன்றினர்.
விஷ்ணுவின் வேண்டுதலின்படி, சப்தகன்னியர் தோன்றி, அந்தகாசூரனின் குருதி தரையில் விழுவதற்கு முன் அதனைக் குடித்தனர். இறுதியில் சிவபெருமான் தன் சூலத்தால் அந்தகாசூரனின் தலையைக் கொய்தார். அந்தகாசூரன் இறக்கையில், சிவபெருமானின் பெயரை உச்சரித்துக் கொண்டே மாண்டதால், சிவகணங்களில் ஒருவராக விளங்கினார்.[6]
Remove ads
இராமாயணம் & மகாபாரததில் அந்தகாசூரன்
இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தின், அத்தியாயம் 30-இல், இராவணனின் தம்பி கரனைக் வதைக்கும் போது, அந்தகாசூரனின் வரலாறு விளக்கப்படுகிறது. காடுகளில் தவமியற்றும் முனிவர்களை வதைத்த அந்தகாசூரனைச் சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் எரித்ததாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் அந்தகாசூரனைச் சிவபெருமானைத் தனது சூலத்தால் கொன்றதாக உள்ளது.[2]
இதனையும் காண்க
- சப்தகன்னியர்
- ஜலந்தரன்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads