மார்தாண்ட சூரியன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்தாண்ட சூரியன் கோயில் (Martand Sun Temple) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் சூரிய பகவான் ஆவார். இக்கோயில் ஷா மிரி வம்சத்தின் ஏழாவது சுல்தானான சிக்கந்தர் ஷா மிரி என்பவனால் இடிக்கப்பட்டது.[2][3][4]
Remove ads
வரலாறு

மார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோடப் பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில் கட்டினார்.[5][6] பொ.ஊ. 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.[7] மார்தாண்ட சூரியன் கோயிலின் அஸ்திவாரம் பொ.ஊ. 370 – 500 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. கோயில் அமைப்பு கார்கோடகப் பேரரசன் இரணாதித்தியன் காலம் முதல் துவக்கப்பட்டது.[8][9]
பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சிகந்தர் புட்ஷிகன் எனும் இஸ்லாமிய தீவிரவாத ஆட்சியாளாரால் மார்த்தாண்ட சூரியன் கோயில் முழுவதுமாக சிதைக்கப்பட்டது.[10][11]
Remove ads
கோயில் அமைப்பு
மார்த்தாண்ட சூரியன் கோயில் காந்தாரம், சீனம், கிரேக்க கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.[12][13]
220 அடி நீளமும், 142 அகலமும் கொண்ட சூரிய கோயில் வளாகத்தில் 84 சிறிய சன்னதிகள் கொண்டிருந்தது.[14] இக்கோயிலில் வேத கால தெய்வங்களான சூரியன், விஷ்ணு, கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் உள்ளது.[15]

Remove ads
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள இக்கோயிலை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது.[16] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக இச்சூரியன் கோயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.[17]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads