அன்பே சிவம் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அன்பே சிவம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 18 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் 3 சூலை 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது ஜீ தொலைக்காட்சி தொடரான மறுமணம் என்ற ஹிந்தி மொழித் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த தொடரில் கவிதா கவுடா[3][4][5] மற்றும் விக்ரம் ஸ்ரீ[6] ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத்தொடர் 3 சூலை 2022 அன்று 230 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதைச்சுருக்கம்
இந்த தொடரில் திருமணமாகி விவாகரத்து ஆன நல்ல சிவம் என்கிற நேர்மையான வழக்கறிஞரும், திருமணமாகி விவாகரத்து ஆனா இரண்டு பிள்ளைகளின் தாயான அன்பு செல்வி என்பவரும் மீண்டும் திருமண பந்தத்தில் இணையும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தாண்டி அவர்களுக்கிடையே உருவாகும் புரிந்துணர்வை மையமாக வைத்து கதை நகர்கின்றது.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ரக்சா ஹோல்லா (2021–2022) → கவிதா கவுடா (2022) - அன்பு
- விக்ரம் ஸ்ரீ - நல்ல சிவம்
துணை கதாபாத்திரங்கள்
- ஸ்ரீகா - இனியா மற்றும் ஓவியா (இரட்டை வேடத்தில்)
- சபிதா ஆனந்த் - லட்சுமி
- கிருத்திகா லட்டு - அரசி
- தீபா ஸ்ரீ - காமக்ஷி
- வருண் உதய் - பாஸ்கர்
- நிஷ்மா செங்கப்பா - மலர்விழி
- வாசுதேவ கிரிஷ் - சரவணன்
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads