அபிதம்மபிடகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபிதம்மபிடகம் (Abhidhamma Pitaka), திரிபிடகத்தின் மூன்றாவது பிடகமாகும். ஏழு நூல்களைக் கொண்ட அபிதம்ம பிடகம், பௌத்த மெய்யியல் தத்துவங்களைக் கொண்டுள்ளது. அபிதம்ம பிடகம் மன மற்றும் உடல்ரீதியான செயல்பாடுகளை நிர்வகிக்கும் அடிப்படை இயற்கை கொள்கைகளை, ஒரு அசாதாரண விரிவான பகுப்பாய்வாக வழங்குகிறது. இதனை தொகுத்தவர் புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான மகாகாசியபர் ஆவார்.[1] [2]
அபிதம்மபிடகத்தின் பிரிவுகள்
அபிதம்ம பிடகம் தம்ம ஸங்கினீ, விபங்கம், கதாவத்து, புக்கல பஞ்ஞத்தி, தாதுகதா, யமகம், பட்டானம் என்னும் ஏழு பிரிவுகளையுடையது. இந்த ஏழு பிரிவுகளுக்கும் புத்தகோசர் உரை எழுதியுள்ளார். முதல் பிரிவுக்கு அத்த சாலினீ என்ற உரையும், இரண்டாது பிரிவுக்கு ஸம்மோஹ வினோதினி என்னும் உரையும், மற்ற ஐந்து பிரிவுகளுக்குப் பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையும் எழுதியுள்ளார்.
அபிதம்ம பிடகத்திற்கு தேரவாத பௌத்தத்திலும், மகாயான பௌத்தத்திலும் பாலி போன்ற மொழிகளில் சில உரைநூல்கள் உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads