பாலி மொழி

பாலி, தெற்கு சுமாத்திரா, சுலாவெசி பகுதிகளில் காணப்படும் மக்களால் பேசப்படும் மொழி From Wikipedia, the free encyclopedia

பாலி மொழி
Remove ads

பாலி மொழி அல்லது பாலியம் (ஆங்கிலம்: Balinese Language; இந்தோனேசியம்: Bhāṣa Bali; பாலியம்: ᬪᬵᬱᬩᬮᬶ) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் மொழிக் குடும்பத்தின், மலாய-பொலினீசிய மொழிகள்; மலாயோ-சும்பாவான் மொழிகள் (Malayo-Sumbawan languages); பாலி–சாசாக்–சும்பாவா எனும் 3 துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.[4]

விரைவான உண்மைகள் பாலி மொழி, நாடு(கள்) ...

பாலி, நுசா பெனிடா, மேற்கு லொம்போக், தெற்கு சுமாத்திரா, சுலாவெசி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களால் பாலி மொழி பேசப்படுகிறது. பாலி மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் இந்தோனேசிய மொழியையும் பயன்படுத்துகின்றனர்.[5]

2000-ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாலி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியன் என அறியப்படுகிறது.

Remove ads

பொது

இருப்பினும், பாலி பண்பாட்டு நிறுவனம் 2011-ஆம் ஆண்டில் 1 மில்லியனுக்கும் குறைவானவர்கள், பாலி மொழியைத் தங்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதாக மதிப்பிட்டுள்ளது. அதே வேளையில், குளோட்டோலாக் (Glottolog) என்பவரால் இந்த மொழி "ஆபத்தான நிலையில் இல்லை" என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6]

வகைப்பாடு

பாலி மொழி என்பது மலாய-பொலினீசிய (Malayo-Polynesian languages) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆஸ்திரோனேசிய மொழியாகும் (Austronesian languages). இது பாலி–சசாக்–சும்பாவா துணைக்குழுவின் (Bali–Sasak–Sumbawa languages) ஒரு பகுதியாகும். [6] உள்நாட்டில், பாலி மொழி என்பது மேட்டு நில பாலி மொழி, தாழ்நில பாலி மொழி மற்றும் நுசா பெனிடா பாலி மொழி என மூன்று தனித்துவமான வகைகளைக் கொண்டுள்ளது.[7]

2000-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தோனேசியாவில் பாலி மொழி 3.3 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது; முக்கியமாக பாலி தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாகப் பேசப்படுகிறது

Remove ads

பயன்பாடு

பாலி மொழி பேச்சுவழக்கு

2011-ஆம் ஆண்டில், பாலி பண்பாட்டு நிறுவனம் (Bali Cultural Agency), பாலி தீவில் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பாலி மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டவில்லை என்று மதிப்பிட்டுள்ளது. ஏனெனில் நகர்ப் புறங்களில் வாழும் பாலி பெற்றோர், இந்தோனேசிய மொழி அல்லது ஆங்கில மொழியை மட்டுமே முதல் மொழியாகத் தங்களின் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்துகிறார்கள்.

அதே வேளையில் இந்தோனேசிய நிறுவனங்கள்; மற்றும் பொது ஊடகங்களில், பாலி மொழி சார்ந்த அன்றாட உரையாடல்கள் மறைந்துவிட்டன. அந்த வகையில், பாலி மொழியின் எழுத்து வடிவத்திற்குப் பெரிய அளவில் அறிமுகம் கிடைக்கவில்லை; மற்றும் பாலி மக்களில் பெரும்பாலோர் பாலி மொழியை வாய்வழித் தொடர்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலி மொழியின் எழுத்து முறை பெரிதும் குறைந்துவிட்டது.

பாலி மொழியின் உயிரோட்டம்

பாலி மக்கள் பெரும்பாலும், பாலி மொழியைத் தங்கள் அன்றாட பேச்சு வழக்கில், இந்தோனேசிய மொழியுடன் கலக்கிறார்கள்.

இருப்பினும், பாலி தீவுக்கு வெளியே உள்ள இட பெயர்வுப் பகுதிகளில், பாலி மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது; அதுவே பாலி மொழியின் உயிரோட்டத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும் நம்பப்படுகிறது.[8]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads