ஹமாஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமாசு (Ḥamas, அரபு: حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya "இசுலாமிய எதிர்ப்பு இயக்கம்") எனப்படுவது பாலத்தீன சுணி இசுலாமிய போராளி இயக்கமும் பாலத்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்[1].
அமாசு இயக்கம் 1987 ஆம் ஆண்டு சேக்கு அகமது யாசின், மற்றும் முகமது தாகா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இசுரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலத்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது[2].
இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்[3].
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத் இறந்த நாள் தொடக்கம் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்று வந்தது. ஜனவரி 2006 இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றது[4].
Remove ads
2024-25 ஹமாஸ்-இஸ்ரேல் போர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads