அம்மன் கோவில் கிழக்காலே
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்மன் கோயில் கிழக்காலே (Amman Kovil Kizhakale) என்பது 1986ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தின் பெயரானது 1982ஆம் ஆண்டில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் வரும் அம்மன் கோயில் கிழக்காலே எனும் பாடல் வரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டதாகும்.[2]
Remove ads
நடிகர்கள்
- விஜயகாந்த் – சின்னமணி
- ராதா – கண்மணி
- ரவிச்சந்திரன் – கண்மணியின் தந்தை
- ஸ்ரீவித்யா – கண்மணியின் தாயார்
- செந்தில்
- ராதாரவி
- வினு சக்ரவர்த்தி
- டி. கே. எஸ். சந்திரன்
- சூரியகாந்த்
- நளினிகாந்த்
வெளியீடு
1986 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படமாகும். தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் 150 நாட்களைத் கடந்தும், 20 திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது.
பாடல்கள்
இது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[3] அனைத்து பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | சின்னமணிக் குயிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04:24 |
2 | நம்ம கட வீதி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:13 | |
3 | காலை நேர (பெண்) | எஸ். ஜானகி | 04:49 | |
4 | காலை நேர (ஆண்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:21 | |
5 | ஒரு மூனு முடிச்சாலே | மலேசியா வாசுதேவன் | 04:36 | |
6 | பூவ எடுத்து | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | 04:31 | |
7 | உன் பார்வையில் | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | 04:07 |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads