அம்மன் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

அம்மன் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

அம்மன் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 27 ஜனவரி 2020 முதல் 1 சூலை 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான பக்தி திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை ஐ. அஹ்மத் என்பவர் தயாரிக்க, ரவி பிரியன் என்பவர் இயக்கியுள்ளார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை பவித்ரா நடிக்க இவருக்கு ஜோடியாக ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அமல்ஜித் என்பவர் நடித்துள்ளார்.[3][4][5][6][7][8][9][10]

விரைவான உண்மைகள் அம்மன், வகை ...

தெய்வ சக்தி மூலம் வாக்கு சொல்லும் சக்தி என்ற பெண்ணும், தெய்வ வாக்கை நம்பாத ஊருக்கு புதிதாக வரும் வைத்தியர் இருவரையும் சேர்ந்து வைக்க விதி செய்யும் சதி என்ன என்பது தான் கதை. இந்த தொடர் 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் மூன்று பருவங்களாக ஒளிபரப்பாகி, 1150 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[11]

Remove ads

பருவங்கள்

மேலதிகத் தகவல்கள் பர்வம், அத்தியாயங்கள் ...

கதை சுருக்கம்

அம்மன் தொடரின் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட ஒரு சிறிய நகரப் பெண்ணான சக்தியைச் சுற்றி கதை நகர்கின்றது. எதிர்காலத்தை முன்னறிவிக்கும் அம்மன் அருள் கொண்டு சக்தி என்ற இளம் பெண். இவளின் தனித்துவமான திறமையால் அந்த கிராமமே அம்மனின் அவதாரம் என போற்றி வணங்கி வருகின்றனர். அதே ஊரில் மருத்துவராக இருக்கும் ஈஸ்வர் கிராம மக்களின் மூட நம்பிக்கையை நம்பாத இவன் சக்தி போலித்தனத்தை வெளிக்காட்ட முயற்சிக்கும் தருணத்தின் இருவரும் விதியின் சதியால் காதலிக்கின்றனர். இவர்களின் காதலுக்கு ஊரும் உறவும் ஏற்குமா? இல்லை எதிர்க்குமா? என்பது தான் கதை.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • பவித்ரா - சக்தி
    • அம்மன் அருளால் வாக்கு சொல்லும் பெண். இவளை ஊரே தெய்வமாக பார்த்தாலும் இவள் தங்க கூண்டுக்குழை சிக்கி இருக்கிற கிளி தான் என்பது யாருக்குமே தெரியாது.
  • அமல்ஜித் - ஈஸ்வர்
    • ஒரு வைத்தியர். கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.
  • ஜென்னிபர் - சாரதா
    • இந்த தொடரின் வில்லி, சக்தியின் அக்கா, என்னதான் சக்தியின் சொல்லுக்கு ஊரே கட்டுப்பட்டாலும் இவளின் கண் அசைவுக்கு சக்தியே கட்டுப்படுவாள்.

துணை கதாபாத்திரம்

  • ஷாலி - லோகம்மாள்
    • வில்லி கதாபாத்திரம், சக்தி வாக்கு சொன்னால் எல்லாமே பலிக்கும் ஆனால் வாக்கு மட்டும் தான் அவளுடையது நாக்கு இவளுடையது.
  • லாவண்யா - இன்பா
  • ஜீவா
  • ரோசரி
  • பத்மினி
  • அணு சுலேஷ்
  • அவினாஷ் அசோக்[12] - அரவிந்த்
  • சுபா ரக்சா
  • அலெக்சாண்டர்[13]

நேரம் மாற்றம்

இந்த தொடர் முதலில் 27 ஜனவரி 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 ஒளிபரப்பாகி, மே 28 2020 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் செப்டம்பர் 4 முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மகாசங்கமம்

  • இந்த தொடர் 15 மார்சு முதல் 27 மார்சு 2021ஆம் ஆண்டு மாங்கல்ய தோஷம் என்ற தொடருடன் மகாசங்கமத்தில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து இரண்டாம் தடவையாக 10 மே 2021 முதல் ஒளிபரப்பானது.[14][15][16][17]

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads