மாங்கல்ய தோஷம்

இந்திய தொலைக்காட்சித் தொடர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாங்கல்ய தோஷம் அல்லது மாங்கல்ய சந்தோஷம் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 23 மார்ச்சு 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

விரைவான உண்மைகள் மாங்கல்ய சந்தோஷம், வகை ...

இந்த தொடரில் மலர் தொடரில் நடித்த 'அருண்' என்பவர் 'தருண்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக தாரா மற்றும் நித்தியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை 'லட்சுமி பிரியா'[1] என்பவர் நடிக்கின்றார்.

Remove ads

கதை சுருக்கம்

இந்த தொடரின் கதை ஒரு பக்கம் காதல் மறுபக்கம் துர் ஆத்மா இதற்க்கு நடுவில் சிக்கிய நித்யாவின் வாழ்க்கை என்ன ஆகும் என்பதுதான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • லட்சுமி பிரியா - நித்யஸ்ரீ/நயன்தாரா
  • அருண் பத்மநாபன் - தருண்
  • ரவி தேஜ் - ரகுவரன் (துர் ஆத்மா)
  • கீர்த்தி விஜய் - தீபிகா
  • ஜீவா - ரஞ்சித்
  • ஹரிஷங்கர் - தாமோதரன் நம்பூதி

துணை கதாபாத்திரம்

  • ஸ்மிருதி → உஷா → சுசித்ரா - சுலக்சனா (தருணின் தாய்)
  • சாய் கோபி → ராஜேஷ் - ஆறுமுகம் (தருணின் தந்தை)
  • சுமி ஸ்ரீகுமார் - மிருதுளா (தீபிகாவின் தாய்)
  • தசாரதி - கோடி (நித்தியாவின் தந்தை)
  • நீலகண்டன் - பிரதீப் (தருணின் சகோதரன்)
  • ஏகவல்லி - சுபா (பிரதீப்பின் மனைவி)
  • வருண் உதய் - அரவிந்
Remove ads

நேரம் மாற்றம்

இந்த தொடர் மார்ச்சு 23, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, 26 அக்டோபர் 2020 முதல் புதிய நேரத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, 4 நவம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மகாசங்கமம்

  • இந்த தொடர் 15 மார்ச்சு முதல் 27 மார்ச்சு 2021ஆம் ஆண்டு அம்மன் என்ற தொடருடன் மகாசங்கமத்தில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து இரண்டாம் தடவையாக 10 மே 2021 முதல் ஒளிபரப்பாகின்றது.

மொழி மாற்றம்

  • இந்த தொடர் 'கலர்ஸ் ஓடியா' என்ற தொலைக்காட்சியில் 'ஓத்திருசாயி' என்று ஒடியா மொழியில் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads