அம்மோனியம் சல்பைட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்மோனியம் சல்பைட்டு (Ammonium sulfite) என்பது (NH4)2SO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
Remove ads
தயாரிப்பு
நீர்த்த கரைசலில் உள்ள கந்தக டை ஆக்சைடுடன் அம்மோனியாவை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் அம்மோனியம் சல்பைட்டைத் தயாரிக்கலாம்:
- 2 NH3 + SO2 + H2O -> (NH4)2SO3
அம்மோனியம் சல்பைட்டு வாயு துப்புரவாக்கிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது இந்நடைமுறை வழக்கற்றுப் போய்விட்டது. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் கந்தக டை ஆக்சைடை அகற்ற அம்மோனியம் ஐதராக்சைடைக் கொண்டுள்ளது. இந்த மாற்றமே வால்தெர் செயல்முறையின் அடிப்படையாகும். இதன் விளைவாக வரும் அம்மோனியம் சல்பைட்டை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்து அம்மோனியம் சல்பேட்டைத் தயாரிக்கலாம்.[4]
Remove ads
பயன்கள்
தனிமநிலை கந்தகத்துடன் வினைபுரிந்து அம்மோனியம் தயோசல்பேட்டு தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக அம்மோனியம் சல்பைட்டு பயன்படுகிறது.
வாழ்விடத்தில்
அழகுசாதனப் பொருட்களுக்கும், அம்மோனியம் சல்பைட்டு ஒரு முடி நேராக்கும் முகவராகவும், கூந்தலில் அலை வடிவம் உருவாக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.[5] சோடியம் ஐதராக்சைடு முடிக்கு ஏற்படுத்தும் அழிவுகரமான தன்மை காரணமாக, சோடியம் ஐதராக்சைடு சார்ந்த தயாரிப்புகளுக்குப் பதிலாக அம்மோனியம் சார்ந்த முடி தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அம்மோனியம் சல்பைட்டு கொண்ட மிகவும் பொதுவான உணவுப் பொருள் கேரமல் வண்ணம் ஐ150 ஆகும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் படி , கேரமல் வண்ணத்தில் அம்மோனியம், பொட்டாசியம் அல்லது சோடியம் சல்பைட்டு உள்ளது.[6]
புகைப்படக் கலையில் படம் பொருத்துபவர்களுக்கு அம்மோனியம் சல்பைட்டு ஒரு பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. படப் படலங்கள் உருவாக்கப்படும்போது, அம்மோனியம் சல்பைட்டு ஐப்போவை (சோடியம் தயோசல்பேட்டு அல்லது அம்மோனியம் தயோசல்பேட்டு) பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் குறைக்கும் முகவர்களில் ஒன்றாக இச்சேர்மம் பயனாகிறது.[7]
செங்கற்கள் தயாரிப்பிலும் அம்மோனியம் சல்பைட்டைப் பயன்படுத்தலாம். அம்மோனியம் சல்பைட்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் செங்கற்கள் முக்கியமாக ஊது உலை உட்பூச்சுக்கு பயன்படுத்தப்படுகின்றன.[8]
குளிர் உலோக வேலைகளுக்கான உயவு எண்ணெய்களில் அம்மோனியம் சல்பைட்டைச் சேர்க்கலாம். உயவு எண்ணெய்கள் உராய்வைக் குறைத்து, வெப்ப உற்பத்தியைக் குறைத்து, உலோகங்களிலிருந்து அசுத்தங்கள் வெளியேறாமல் தடுக்கும் நோக்கம் கொண்டவையாகும்.[8]
வேதிப் பண்புகள்
அம்மோனியம் சல்பைட்டு ஓர் ஒடுக்கும் முகவராகும்.[9] இது சிதைவதற்கு வெப்பப்படுத்தும்போது கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரசனின் ஆக்சைடுகளை வெளியிடுகிறது.
அம்மோனியம் சல்பைட்டின் ஒப்படர்த்தி 1.41. ஆகும்.[2] அம்மோனியம் சல்பைட்டின் ஒளிவிலகல் குறியீடு எண் மதிப்பு 1.515 ஆகும்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads