சோடியம் சல்பைட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

சோடியம் சல்பைட்டு
Remove ads

சோடியம் சல்பைட்டு (Sodium sulfite) என்பது Na2SO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறத்தில், நீரில் கரையக்கூடிய திடப்பொருளாகக் காணப்படுகிறது. வணிக ரீதியாக எதிர் ஆக்சிசனேற்றியாகவும், பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மரம் மற்றும் தாவர உலர் பொருள்களான லிக்னோசெல்லுலோசிக்கு பொருட்களின் கூழ்மமாக்கலுக்கும் சுத்திகரிப்பு செயல்முறைகளில் கரிம பலபடியான லிக்னினை மென்மையாக்குவதற்கும் பயன்படுகிறது.[1] எழுநீரேற்று ஒன்றும் அறியப்படுகிறது. ஆனால் காற்றினால் நிகழும் ஆக்சிசனேற்றத்திற்கு அதிக உணர்திறன் இருப்பதால் இச்சேர்மம் குறைவான பயன்பாட்டைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

Thumb
சோடியம் சல்பைட்டு நீரிலியின் கட்டமைப்பு

சோடியம் ஐதராக்சைடு கரைசலை கந்தக டை ஆக்சைடுடன் சேர்த்து சூடாக்கி சோடியம் சல்பைட்டை தயாரிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் நனைக்கப்படும் போது, சோடியம் சல்பைட்டு ஆரம்பத்தில் ஒரு வெள்ளை நிற திடப்பொருளாக வீழ்படிவாகிறது. அதிக அளவு கந்தக டை ஆக்சைடுடன் இத்திடப்பொருள் கரைந்து டைசல்பைட்டை அளிக்கிறது. இது குளிர்ந்தவுடன் படிகமாகிறது.[2]

SO2 + 2 NaOH -> Na2SO3 + H2O

சோடியம் கார்பனேட்டு கரைசலுடன் கந்தக டை ஆக்சைடைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் சோடியம் சல்பைட்டை தொழில்துறை ரீதியாக தயாரிக்கலாம்.[3] ஒட்டுமொத்த வினை பின்வருமாறு:

SO2 + Na2CO3 -> Na2SO3 + CO2
Remove ads

பயன்கள்

சோடியம் சல்பைட்டு முதன்மையாக காகிதத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. [4] நடுத்தர அடர்த்தி இழை பலகைகளை உற்பத்தி செய்வதற்காக மரத்தை இழைகளாக மாற்றும் வெப்ப இயந்திர மாற்றத்திலும் பயன்படுத்தப்படுகிறது.[5]

ஓர் ஆக்சிசன் துப்புரவு முகவராக, அரிப்பு சிக்கல்களைத் தவிர்க்க நீராவி கொதிகலன்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க சோடியம் சல்பைட்டு பயன்படுத்தப்படுகிறது.[6] புகைப்படத் துறையில், இது உருவேற்றும் கரைசல்களை ஆக்சிசனேற்றத்திலிருந்து பாதுகாக்கிறது. புகைப்படச் சுருள் மற்றும் புகைப்பட-காகித குழம்புகளிலிருந்து நிலைநிறுத்தியை (சோடியம் தயோசல்பேட்டு) கழுவுகிறது.

ஒரு குறைக்கும் முகவராக, சோடியம் சல்பைட்டு நெசவுத் தொழிலில் வெளுக்கும், கந்தகத்தை நீக்கும் மற்றும் குளோரினேற்றும் முகவராக (எ.கா. நீச்சல் குளங்களில்) பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த பழங்கள் நிறமாற்றம் அடைவதைத் தடுக்கவும், இறைச்சிகளைப் பாதுகாக்கவும் ஒரு பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்தும்போது இதன் குறைக்கும் பண்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

சல்போனேற்றம் மற்றும் சல்போமெத்திலேற்றம் முகவராக சோடியம் சல்பைட்டு பயன்படுத்தப்படுகிறது. சோடியம் தயோசல்பேட்டு உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.

வெல்மேன்–லார்டு செயல்முறை, சோடியம் சல்பைட்டை கந்தக நீக்க வினையில் பயன்படுத்துகிறது.

Remove ads

வினைகள்

சோடியம் சல்பைட்டு முதன்மையாக ஓர் இலேசான ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. எழுநீரேற்றுப் படிகங்கள் சூடான வறண்ட காற்றில் பொங்கி வெளியேறுகின்றன. எழுநீரேற்றுப் படிகங்களும் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து சோடியம் சல்பேட்டை உருவாக்குகின்றன. நீரற்ற வடிவம் காற்றினால் ஏற்படும் ஆக்சிசனேற்றத்திற்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டதாகச் செயல்படுகிறது.[7]

கட்டமைப்பு

எக்சு-கதிர் படிகவியல் ஆய்வு முடிவின்படி சோடியம் சல்பைட்டு எழுநீரேற்று பிரமிடு வடிவ SO32- மையங்களைக் கொண்டுள்ளது. S-O பிணைப்பு தூரங்கள் 1.50 ஆகவும், O-S-O பிணைப்புக் கோணம் 106º பாகைக்கு அருகிலும் உள்ளன.[8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads