அயோத்தி மாநகராட்சி

From Wikipedia, the free encyclopedia

அயோத்தி மாநகராட்சி
Remove ads

அயோத்தி மாநகராட்சி (Ayodhya Municipal Corporation), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 16 மாநகராட்சிகளில் ஒன்றாகும். இம்மாநகராட்சி அயோத்தி மாவட்டத்தின் அயோத்தியை தலைமையிடமாகக் கொண்டு, மே, 2017ம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்டதாகும்.

விரைவான உண்மைகள் அயோத்தி மாநகராட்சி श्री अयोध्या जी नगर निगम, வகை ...

அயோத்தி நகராட்சி மற்றும் பைசாபாத் நகராட்சிகளை இணைத்து, அயோத்தி மாநகராட்சி, மே 2017 அன்று உத்தரப் பிரதேச அரசு நிறுவியது. 2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 2,21,118 மக்கள்தொகை கொண்ட அயோத்தி மாநகராட்சி, 60 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[1]

மேலும் மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சியும் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இப்புதிய இரண்டு மாநகராட்சிகளுடன், உத்தரப் பிரதேசம் 16 மாநகராட்சிகளைக் கொண்டுள்ளது. [2]

Remove ads

மாநகராட்சி தேர்தல், 2017

உத்தரப் பிரதேச உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017, நவம்பர் மாதத்தில், 22, 26 மற்றும் 29 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வமயம் மே, 2017ல் புதிதாக நிறுவப்பட்ட அயோத்தி மாநகராட்சி மற்றும் மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சிகள், முதல் முறையாக தனது மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது. [3] [4]

அயோத்தி மாநகராட்சி மேயராக பாரதிய ஜனதா கட்சியின் மேயர் வேட்பாளர் ரிஷிகேஷ் உபாத்தியா வெற்றி பெற்றார். [5]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads