பைசாபாத்

From Wikipedia, the free encyclopedia

பைசாபாத்map
Remove ads

பைசாபாத் (Faizabad) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்த பைசாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரத்தில் பைசாபாத் மாநகராட்சி உள்ளது. சரயு ஆற்றின் கரையில் அமைந்த பைசாபாத் நகரம், மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், வாரணாசிக்கு வடமேற்கே 194 கி.மீ. தொலைவிலும், அயோத்தியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. முகலாயப் பேரரசின் போது, பைசாபாத் நகரம் அயோத்தி நவாபுகளின் தலைநகரமாக இருந்தது.

விரைவான உண்மைகள் பைசாபாத், நாடு ...
Remove ads

பைசாபாத் நகரத்தின் பெயர் மாற்றம்

13 நவம்பர் 2018 அன்று, பைசாபாத் நகரத்தின் பெயரை அயோத்தி என பெயர் மாற்றுவதற்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.[2]

வரலாறு

Thumb
பைசாபாத் நகரத்தை நிறுவிய முதலாம் சதாத் அலி கான், முதல் அயோத்தி நவாப்
Thumb
சப்தர்ஜங், இரண்டாம் அயோத்தி நவாப்

இராமாயணம் காவியம் கூறும் சகேதம் என்பது அயோத்தி நகரத்தின் மற்றொரு பெயராகும். முகலாயப் பேரரசின் ஆட்சிக்காலத்தில், 1722-இல் அவத் பகுதியின் ஆளுநர் நவாப் சதாத் அலி கான், அயோத்தி நகரத்திற்கு அருகில், சரயு ஆற்றின் கரையில் கோட்டையுடன் கூடிய பைசாபாத் நகரத்தை நிறுவினார். பிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது, 1801 முதல் 1859 முடிய அயோத்தி இராச்சியம், துணைப்படைத் திட்டத்தின் கீழ் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் 1859-இல் அவகாசியிலிக் கொள்கையின் படி, அயோத்தி இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் நேரடி ஆட்சியில் இணைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், 1947-இல் பைசாபாத், உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமானது.

Remove ads

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி பைசாபாத் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,65,228 ஆகும். அதில் ஆண்கள் 85,620 ஆகவும்; பெண்கள் 79,608 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 930 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.03% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17,781 ஆகவுள்ளனர்.[3] மக்கள்தொகையில் இந்துக்கள் 1,15,459 (69.88 %) ஆகவும், இசுலாமியர்கள் 46,789 (28.32 %) சீக்கியர்கள் 1,373 (0.83 %) ஆகவும், மற்றவர்கள் 1607 (0.95%) ஆகவும் உள்ளனர். இந்நகரத்தில் இந்தி, உருது மற்றும் அவதி மொழிகள் பேசப்படுகிறது.

போக்குவரத்து

தொடருந்து வசதிகள்

Thumb
பைசாபாத் தொடருந்து நிலையம்
Thumb
அயோத்தி தொடருந்து நிலையம்

பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்

6 நடைமேடைகளுடன் கூடிய பைசாபாத் தொடருந்து நிலையம் கான்பூர், லக்னோ, வாரணாசி, அலகாபாத், மும்பை, தில்லி, கொல்கத்தா நகரங்களுடன் இணைக்கிறது.[4]

அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம்

மூன்று நடைமேடைகளுடன், பைசாபாத் தெற்கில் அமைந்த அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம், கோரக்பூர், கான்பூர், லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, ஆசான்சோல், கொல்கத்தா, கவுகாத்தி, அமிர்தசரஸ், மும்பை, தில்லி, சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads