அயோத்தி இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயோத்தி இராச்சியம் (Oudh State)[2] இதனை அவத் நாடு என்றும் அழைப்பர். அயோத்தி இராச்சியம், வட இந்தியாவின் தற்கால உத்தர பிரதேசத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. அயோத்தி சுல்தானகத்தின் தலைநகரம் முதலில் பைசாபாத் ஆக இருந்தது. பின்னர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியின் போது தலைநகரமாக லக்னோ விளங்கியது
Remove ads
வரலாறு
முகலாயப் பேரரசர் முகமது ஷாவின் ஆட்சி வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், அயோத்தி பிரதேசத்தின் ஆளுநராக இருந்த சதாத் அலி கான் என்ற புர்கான் உல் முல்க் சதாத் கான் என்பவர் அயோத்திக்கு அருகில் பைசாபாத் நகரத்தை நிறுவி 1722-ஆம் ஆண்டில் அயோத்தி நவாப் ஆனார். அவரும் அவரது 12 வாரிசுகளும் அவத் பகுதியை 1722 முதல் 1859 முடிய அயோத்தி நவாப்புகள் என்ற பெயரில் 136 ஆண்டுகள் ஆண்டனர்.[3]
அயோத்தி நவாப்புகள் பிரித்தானியர்களின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றதால், மே, 1816 முதல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்பிற்குட்பட்ட சுதேச சமஸ்தானமாக விளங்கியது.
அயோத்தி நவாப், 1857 சிப்பாய்க் கிளர்ச்சியையை தனது இராச்சியப் பகுதியில் அடக்க திறனற்று போனார். டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின் படி, அயோத்தி நவாப் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் காரணம் காட்டி, 1859ல் அவத் இராச்சியத்தை, பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இணைத்தனர்.
Remove ads
அயோத்தி இராச்சியப் பகுதிகள்
அயோத்தி இராச்சியத்தில், தற்கால உத்தரப் பிரதேச மாவட்டங்களான அம்பேத்கர்நகர், பகராயிச், பலராம்பூர், பாரபங்கி, பஸ்தி, பைசாபாத், கோண்டா, ஹர்தோய், லக்கிம்பூர், லக்னோ, பிரத்தாப்புகர், ரேபரேலி, சிராவஸ்தி, சுல்தான்பூர், சித்தார்த்நகர், உன்னாவு, சீத்தாபூர் மற்றும் கங்கை சமவெளியின் தெற்கு பகுதிகளான கான்பூர், பதேபூர், கௌசாம்பி, அம்ரேகா மற்றும் அலகாபாத் என 22 மாவட்டங்கள் இருந்தது.
மக்கள்தொகை பரம்பல்
18ம் நூற்றாண்டில் அயோத்தி இராச்சியத்தின் மக்கள்தொகை 3 மில்லியனாக இருந்தது கணித்துள்ளனர். மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் இந்துக்களே.[4]:155[5] சமசுகிருதம் மற்றும் பாரசீக மொழிகள் கலந்த அவதி மொழி பேசப்பட்டது.
அயோத்தி நவாபுகள்
இதனையும் காணக்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads