அரங்கம்பாளையம்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரங்கம்பாளையம் (ஆங்கிலம்: Rangampalayam) அல்லது பேச்சு வழக்கில் 'ரங்கம்பாளையம்' என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

விரைவான உண்மைகள் அரங்கம்பாளையம்Rangampalayam அரங்கம்பாளையம், நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 211 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அரங்கம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.310500°N 77.706500°E / 11.310500; 77.706500 ஆகும். ஈரோடு, காசிபாளையம், சோலார், மூலப்பட்டறை, பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம் மற்றும் திண்டல் ஆகியவை அரங்கம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

அரங்கம்பாளையத்தில், கொங்கு கல்வி நிலையம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.[4][5] மேலும், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரங்கம்பாளையத்தில் அமையப் பெற்றுள்ளது.[6]

ஈரோடு வெளிவட்டச் சாலையின் நீட்டிப்பு, அரங்கம்பாளையம் வழியாகச் செல்கிறது.[7] அரங்கம்பாளையத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில், ஈரோடு மாவட்டப் பதிவுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.[8]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads