அருணகிரிநாதர் (ஆதீனம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்ற அருணகிரிநாதர் (ஆங்கிலம்: Arunagirinathar) (- மறைவு: 2021 ஆகஸ்ட் 13) மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமாவார். தமிழ்த் தொண்டு, ஆன்மீகத் தொண்டு, சமூகத் தொண்டுகளிலும் ஈடுபட்டவர்.

Remove ads
இளமைக் காலம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து[1] பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் 1980 களில் முரசொலி இதழின் பத்திரிக்கையாளராக இருந்தார்.[2]
ஆன்மீகப் பணிகள்
இவரது தந்தை அறிவுறுத்தலில் திருவாவடுதுறை ஆதின மடத்தில் சேர்ந்து சைவ சமயக் கல்வியைக் கற்றார்.[3] பின்னர் தருமை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்து 1975 மே 27ம் தேதி மதுரை ஆதீன இளைய குருமகா சன்னிதானமாகப் பெறுப்பேற்றார்.[4] 1980 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி 292 ஆவது குரு மகா சன்னிதானமாகப் பட்டம் பெற்றார்.[5] மொரிசியஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று சைவ நெறியைப் பரப்பினார். பல கோயில்களில் தமிழில் குடமுழுக்க நிகழ்ச்சிகளை நடத்தினார்.[3] மாற்று மத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சமய நல்லிணக்கம் பேணினார்.
Remove ads
அரசியல் செயல்பாடுகள்
இலங்கை இனப்பிரச்சினையில் இலங்கை அரசுக்கு எதிராகவும், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் பல்வேறு பரப்புரைகள் செய்தார்.[3] 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.[6][7] 2019 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.[8]
2012 ஏப்ரல் 12 இல் அடுத்த பீடாதிபதியாக நித்யானந்தாவை இவர் தேர்ந்தெடுத்த நிகழ்வு சர்ச்சையானது.[9] அதன் தொடர்ச்சியாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.[10] உடல்நலக்குறைவால் 2021 ஆகஸ்ட் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு மறைந்தார்.[11]
இவருக்குப் பின்மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் 23 ஆகஸ்டு 2021 அன்று முடிசூட்டப்பட்டார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads