அர. சக்கரபாணி

தமிழக அரசியவ்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அர. சக்கரபாணி என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் தமிழக சட்டப்பேரவைக்கு தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிட முனேற்றக் கழக கட்சியின் உறுப்பினரான இவர் 1996,[1] 2001,[2] 2006,[3] 2011,[4] 2016, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றார். அவர் 2006 முதல் 2011 வரையிலும், 2011 முதல் 2016 வரையும் 2016 முதல் 2021 திமுக சட்டமன்ற கொறடாவாக இருந்துள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் முதல் முறையாக தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை (உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[5]

Remove ads

பிறப்பு

கள்ளிமந்தையம் அருகே ஒரு கிராமத்தில் அர.சக்கரபாணி பிறந்தார்.

போட்டியிட்ட தேர்தல்கள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல்கள், தொகுதி ...
Remove ads

தேர்தல்

அர.சக்கரபாணி முதல்முதலில் 1996 இல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டார். இவர் அதிமுகவின் கே. செல்லமுத்தை 36823 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2001 ஆம் ஆண்டில் அதே தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக போட்டியிட்டார், அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது என்றாலும், அர.சக்கரபாணி 1369 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை மீண்டும் கைப்பற்றினார். 2006 ஆம் ஆண்டில் மீண்டும் அதே ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து போட்டியிட்டு 19903 என்ற வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இவர் திமுக கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில், அர.சக்கரபாணி 14933 வாக்குகள் வெத்தியாசத்தில் மீண்டும் வென்றார். 2016 தேர்தலில் அர.சக்கரபாணி அதிமுக வேட்பாளர் கிட்டுசாமியை 65727 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவரது தொடர் வெற்றியானது மாநிலத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிற்கு அடுத்ததாக உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads