அழகு (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

அழகு (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

அழகு என்பது சன் தொலைக்காட்சியில் 20 நவம்பர் 2017 முதல் 3 ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரை விஷன் டைம் என்ற நிறுவனம் தயாரிக்க, ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐசுவரியா, காயத்ரி ஜெயராமன், பூவிலங்கு மோகன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] இந்தத் தொடர் கொரோனா வைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 719 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் அழகு, வகை ...
Remove ads

கதை கரு

இந்த தொடரின் கதை கரு பள்ளி ஆசிரியரான பழனிசுவாமி மற்றும் மனைவி அழகம்மா, இவர்களின் 5 பிள்ளைகளான (ரவி, மகேஷ், ஐஸ்வர்யா, திருநாவுக்கரசு, காவ்யா) ஆகியோரின் வாழ்வில் வரும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கதை நகர்கின்றது.

நடிகர்கள்

பழனிசுவாமி குடும்பம்

  • ரேவதி - அழகம்மை பழனிசாமி
    • குடும்பத்தின் தலைவர். பழனிசாமியின் மனைவி, எல்லோருக்கும் நன்மையை மட்டும் நினைப்பவர் மற்றும் படிக்காத அறிவாளியும் ஆவார்.
  • தலைவாசல் விஜய் - பழனிசாமி
    • மனைவி சொல்ல மட்டும் கேட்கும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.
  • ஸ்ருதி ராஜ் - சுதா (ரவியின் மனைவி / சுரேந்தரின் முன்னாள் மனைவி)
    • வழக்கறிஞ்சர், சகுந்தலா தேவி மற்றும் அரவிந்தின் மூத்த மகள் (என்னும் எவருக்கும் தெரியாது), பூர்ணாவின் சகோதரி மற்றும் அழகம்மையின் முதல் மருமகள். ரவிவின் நண்பரான சுரேந்தரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர் இறக்க தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் ரவிவை திருமணம் செய்து கொண்டார். கருணை உள்ளம் கொண்டதாள் இவளை சின்ன அழகம்மை என்று அழைப்பார்கள்.
  • சங்கீதா - பூர்ணா மகேஷ் (வில்லி)
    • சுதாவின் சகோதரி, சகுந்தலா தேவி, அரவிந்தின் இரண்டாவது மகள், அழகம்மையின் இரண்டாவது மருமகள், ரவியுடன் குழந்தைப் பருவத்தில் காதல் கொண்டிருந்தார். ஆனால் சுதாவுடன் ரவி திடீரென திருமணம் செய்து கொண்டதால், மகேஷ் திருமணம் செய்து கொண்டார்.
  • காயத்ரி ஜெயராமன் - சகுந்தலா தேவி அரவிந்
    • இவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் ஆவார், சுதா, பூர்ணா மற்றும் மதன் ஆகியோரின் தாய். அரவிந்தின் மனைவி.

மற்ற நடிகர்கள்

  • மித்ரா → நித்திய தாஸ் → நிரஞ்சனி (அழகம்மாவின் மகள்)
  • ஐசுவரியா - வசந்தா (பழனிசுவாமியின் சகோதரி)
  • வாசு விக்ரம் - மணிமாறன் (அழகம்மாவின் சகோதரன்)
  • பூவிலங்கு மோகன் - சேதுராமன் (கணேஷின் தந்தை)
  • பி. கண்ணன் - கண்ணன் (சேதுராமனின் அண்ணன்)
  • ராஜ்யலட்சுமி - தேவி (மணிமாறனின் மனைவி)
  • ஜெயராம் - கணேஷ் (ஐஸ்வர்யா வின் கணவன் / சேதுராமனின் மூத்த மகன்)
  • பாரினா ஆசாத் (1-150) → அக்ஷ்தா போபியா (152-719) - நிவேதிதா
  • நவிந்தர் - மகேந்திரா
  • மௌனிகா - மனிஷா
  • அஸ்வின் - சுரேந்தர்
  • ராஜேஷ் - நவீன்
  • பாவாஸ் சயனி - வெங்கட்
  • ரம்யா ஷங்கர் - ரதி

சிறப்புத் தோற்றம்

நடிகர்களின் தேர்வு

இது ஒரு குடும்ப பின்னையை கொண்ட தொடர். இந்த தொடரின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகை ரேவதி அழகம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், இவர் 10 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் தொலைக்காட்சித் தொடர் இது ஆகும். இவருக்கு ஜோடியாக திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் பழனிசுவாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் கங்கா யமுனா சரஸ்வதி என்ற தொடருக்கு பிறகு நடிக்கும் தொடர் இதுவாகும். தென்றல் தொடர் புகழ் ஸ்ருதி ராஜ் சுதா என்ற ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். காவலன் திரைப்பட நடிகை மித்ரா குரியன் அழகம்மா மற்றும் பழனிசுவாமியின் மகளாக நடித்தார். அத்தியாயம் 243 முதல் இவருக்கு பதிலாக நடிகை நித்ய தாஸ் நடித்தார். இவர்களுடன் பிரபலமான நடிகர்கள் ஐசுவரியா, வாசு விக்ரம், பூவிலங்கு மோகன், லோகேஷ் மற்றும் பி. கண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் தமிழில் புகழ் பெற்ற வம்சம் தொடருக்கு பதிலாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, அக்டோபர் 22, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பானது. 5 ஆகத்து 2019 முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 719 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...
Remove ads

மதிப்பீடுகள்

கீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் அத்தியாயங்கள், ஒளிபரப்பான திகதி ...

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads