ஆதித்தியா எல் 1

கதிரவனை ஆராய அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி ஆய்வுக் கலம் From Wikipedia, the free encyclopedia

ஆதித்தியா எல் 1
Remove ads

ஆதித்தியா எல்1 (Aditya L1) என்பது சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காகத் திட்டமிடப்பட்ட சூரியப்புறணி வரைவி விண்கலமாகும், இது தற்போது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) உட்பட்ட பல்வேறு இந்திய ஆய்வு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.[1] இது புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள எல்1 புள்ளியைச் சுற்றி ஒரு சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் நிலைநிறுத்தப்படும். அங்கு இது சூரிய வளிமண்டலம், சூரியக் காந்தப் புயல்கள், புவியைச் சுற்றியுள்ள சூழலில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்யும்.

விரைவான உண்மைகள் திட்ட வகை, இயக்குபவர் ...

சூரியனை ஆய்வுசெய்ய இந்தியாவால் ஏவப்படும் முதல் சூரியச் சுற்றுகலன் திட்டமாகும். இத்திட்ட இயக்குநராக நிகார் சாஜி விளங்குகிறார்.[3][4][6][7] இது சூ2023 செப்டம்பர் 2 அன்று 11:50 மணி (இசீநே) அளவில், முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV-C57) வழி, சிறீ அரிகோட்டாவில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி ஆய்வு மையம் (SDSC) இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஆதித்தியா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[3][4][6][8]

Remove ads

திட்ட நோக்கங்கள்

ஆதித்தியா எல்1 திட்டத்தின் முதன்மை அறிவியல் நோக்கங்களாகப் பின்வருவன அமைகின்றன:

  • சூரிய மேல் வளிமண்டல (நிறக்கோளம், சூரியப்புறணி உட்பட) இயங்கியல் ஆய்வு.
  • நிறக்கோள, சூரியப்புறணிச் சூடாக்க ஆய்வு, பகுதி இயனியாக்க மின்ம இயற்பியல், சூரியப்புறணி பொருண்மை உமிழ்வுகளின் தொடங்கலும் சுடர் எறிவுகளும்
  • சூரியனில் இருந்துவரும் துகள் இயங்கியலை ஆய்வதற்கான தரவுகளைத் தரும் களத் துகள், மின்மச் சூழல் நோக்கீடுகள்.
  • சூரியப்புறணி இயற்பியலும் அதன் சூடாக்க இயங்கமைப்பும்.
  • வெப்பநிலை, விரைவு(திசைவேகம்), அடர்த்தி உட்பட்ட கூறுபாடுகளில் சூரியப்புறணியையும் அதன்மின்ம ஊடகக் கண்ணிகளையும்(loops) ஆய்ந்தறிதல்
  • சூரியப்புறணிப் பொருண்மை உமிழ்வுகளின்(CMEs) தோற்றமும் வளர்ச்சியும் இயங்கியலும்
  • சூரிய உமிழ்வு நிகழ்ச்சிகளை உருவாக்கும் சூரிய வளிமண்டல அடுக்குகளில்(நிறக்கோளம் , ஒளிக்கோளம், விரியும் சூரியப்புறணி) நிகழும் நிகழ்வுகளின் வரிசைமுறையை இனங்காணல்.
  • சூரியப்புறணியின் காந்தப்புலக் கிடப்பியலும், காந்தப்புல அளவீடும் .
  • விண்வெளி வானிலை உருவாக்கக் காரணிகள் ( சூரியக் காற்றின் தோற்றமும், உட்கூறும், இயங்கியலும்) .[9]
Remove ads

வரலாறு

Thumb
உறைக்குள் ஆதித்தியா எல் 1

ஆதித்தியா விண்கலக் கருத்துப் படிமத்தை விண்வெளி ஆராய்ச்சிக் குழு 2008 இல் உருவாக்கியது.[10][11] முதலில் இது ஒரு சிறிய 400 kg (880 lb) எடையுள்ள 800 கிமீ குத்துயரத் தாழ் புவி வட்டணையில் இருந்து சூரியப்புறணியை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளாகவே கருதப்பட்டது. இதில் ஒரு புறணிவரைவி மட்டும் பொருத்தலாம் என வரையரை செய்யப்பட்டது. இதற்காக, 2017-18 ஆம் நிதியாண்டில் செய்முறைப் பாதீடாக மூன்று கோடி இந்திய உருபா ஒதுக்கவும் பட்டது.[12][13][14] பிறகு, இத்திட்ட எல்லை விரிவாக்கப்பட்டது. இது தற்போது ஓர் எளிய சூரிய, விண்வெளிச் சுற்றுச்சூழல் நோக்கீட்டகமாக புவி-சூரியச் சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் எல் 1 இலாகிரேஞ்சுப் புள்ளியில் ஏழு அறிவியல் கருவிகளோடு நிலைநிறுத்த திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது;[15] எனவே, இத்திட்டம் ஆதித்தியா எல் 1 என பெயர் மாற்றப்பட்டு, 2019 சூலையில் ஏவுதல் செலவில்லாமல் ₹378.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[16]

Thumb
பிரிந்தநிலை உருவடிவில் ஆதித்தியா எல் 1
Remove ads

திட்டம்

Thumb
புவி-சூரிய அமைப்பின் எல் 1 புள்ளி ( அளவுகோல் அற்றது) – ஐந்து இலாகிரேஞ்சுப் புள்ளிகளில் ஏதாவதொன்றில் வைக்கப்படும் சிறுபொருள் தன் சார்பிருப்பை மாற்றாமல் அப்புள்ளியிலேயே நிலைத்துநிற்கும்.

ஆதித்தியா-L1 திட்டம் நிறைவுற, ஏவியதும் 109 நாட்கள் எடுத்துகொள்ளும்;[17] ஏனெனில், சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் அமையும் எல் 1 புள்ளி புவியில் இருந்து 15,00,000 கிமீ தொலைவில் இருப்பதால் இந்நேரம் வேண்டியிருக்கிறது. 1,500 kg (3,300 lb) எடையுள்ள விண்கலம் பலவகை நோக்கங்களுக்கான ஏழு அறிவியல் கருவிகளைக் கொண்டுசெல்கிறது. இவற்றில், சூரியப்புறணிச் சூடாக்கம், சூரியக் காற்று முடுக்கம், சூரியப்புறணி காந்தமானி, புவி வளிமண்டலத்தை இயக்கி, புவிக் கோளகக் காலநிலையைத் தீர்மானிக்கும் புவியருகு புறவூதாக் கதிர்வீச்சின் தோற்றத்தையும் கண்காணிப்பையும் செய்யும் கருவி, ஒளி, நிறக் கோளங்களைச் சூரியப்புறணியுடன் பிணைத்தலை ஆயும் கருவி, விண்வெளி, புவித்தரைத் தொழில்நுட்பங்களைத் தாக்கும் புவிசுற்றிலுமுள்ள விண்வெளிச் சுற்றுச்சூழலின் களப் பான்மைகளை அறிய, உயர் ஆற்றல் துகள் பாயத்தையும் சூரியக் காற்று, சூரியக் காந்தப்புயல்களின் காந்தப்புலங்களை அளத்தலும் ஆகியன அடங்கும்.[1]

ஆதித்தியா-L1 விண்கலம் சூரியப்புறணி, ஒளி, நிறக்கோளங்களின் நோக்கீடுகளைத் தரும். மேலும், ஒரு கருவி எல் 1 வட்டணையை அடையும் உயர் ஆற்றல் சூரியத் துகள்களின் பாயத்தை ஆயும்; காந்தமானி சமனிலை ஈர்ப்பு வட்ட எல் 1 புள்ளியருகேயுள்ள சூரியக் காந்தப்புலச் செறிவில் நிகழும் மாற்றங்களை அளக்கும். இந்த அறிவியல் கருவிகள் புவிக் காந்தப்புலத்தின் குறுக்கீட்டுக்கு வெளியே அமையவேண்டும். எனவே, முதலில் முன்மொழிந்த தாழ் புவி வட்டணை ஆதித்தியா திட்டத்தில் இவற்றை வைத்து ஆய்வு செய்திருக்க முடியாது.[18]

சூரிய இயற்பியலில் இதுவரை தீர்க்கப்படாத முதன்மையான சிக்கல் சூரிய வளிமண்டல மேலடுக்கின் வெப்பநிலை 1,000,000 K (1,000,000 °C; 1,800,000 °F) அளவு சூடாகவும் அதன் கீழடுக்கின் வெப்பநிலை 6,000 K (5,730 °C; 10,340 °F) ஆக மட்டுமே அமைதலாகும். அதோடு, குறுங்கால இடைவெளியிலும் நெடுங்கால இடைவெளியிலும் சூரியக் கதிர்வீச்சு புவி வளிமண்டல இயங்கியலை சரியாக எப்படி தாக்குகிறது என்பதும் புரிந்துகொள்ளப்படாமலே உள்ளது. இத்திட்டம் சூரிய வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளின் படிமங்களை ஒரே நேரத்தில் பெறவுள்ளதால், ஆற்றல் ஓரடுக்கில் இருந்து மற்றோர் அடுக்குக்கு எப்படி வழிபடுத்தப்பட்டு கடத்தப்படுகிரது என்பதைத் தெளிவாக அறிய வாய்ப்புள்ளது. எனவே, ஆதித்தியா எல் 1 விண்கலத்திட்டம் சூரிய இயங்கியல் நிகழ்வுகளை எளிதாகப் புரிந்துகொள்ளவும் சூரிய இயற்பியலிலும் எல்லிய இயற்பியலிலும் உள்ள சில சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் உதவும்.

Remove ads

அறிவியல் கருவிகள்

Thumb
ஆதித்தியா எல் 1 இல் உள்ள அறிவியல் கருவிகள்

ஆதித்தியா எல் 1 கருவிகள் சூரிய வளிமண்டலத்தை நோக்கீடு செய்யும்; முதன்மையாக நிறக்கோளத்தையும் சூரியப்புறணியையும்ஆயும். களக்கருவிகள் L1புள்ளியின் களச்சூழலை நோக்கீடு செய்யும். விண்கலத்தில் ஏழு கருவிகள் உள்ளன; இவற்றில் நான்கு சூரியனை ஆயும் தொலையுணர்வுக் கருவிகள்; மற்ற மூன்றும் களச்சூழல் நோக்கீட்டுக் கருவிகள் ஆகும்:[19]

மேலதிகத் தகவல்கள் வகை, வ.எண் ...
  • கட்புல உமிழ்வரி சூரியப் புறணி வரைவி (VELC): சூரியப் புறணி வரைவி ஓர் ஒளித்தடுப்பு வழியா சூரிய ஒளியைத் தடுத்து முழு சூரிய ஒளிமறைப்பை உருவாக்குகிறது. இந்தத் தொலைநோக்கி சூரியப் புறணியின் கட்புல அலைநீள்ங்களிலும் அகச்சிவப்புக்கதிர் அலைநீளங்களிலும் கதிர்நிரல் படிமம் எடுக்க வல்லதாகும். இந்த அளவீட்டின் நோக்கங்களாக, சூரியப் புறணி அளவுருக்களை அறிதல், மூன்று கட்புல அலைவரிசையயும் ஒரு அகச்சிவப்புக் கதிர் அலைவரிசையையும் பயன்படுத்தி, சூரியப் புறணிப் பொருண்மை உமிழ்வின் தோற்றமும் இயங்கியலும் ஆய்தல், சூரியப் புறணியின் காந்தப்புல அளவீடுகள்( சிற்றளவாக,பத்து காசு கள் வரை) ஆகியனவும் கூடுதல் நோக்கங்களாக, சூரிய வளிமண்டலம் ஏன் சுரியனை விட உயர் வெப்பநிலையில் அமைகிறது என்பதைத் தீர்மானித்தல், எப்படி விண்வெளி வானிலை மாற்றங்கள் புவிக் காலநிலையைத் தாக்குகிறது என்பதை ஆய்தல் ஆகியனவும் அமைகின்றன. சூரியப் புறணி வரைவியின் எடை 170 kg (370 lb) அளவுக்கு அணுக்கமாக அமைகிறது.[20]
  • சூரியப் புறவூதா படிமமாக்கத் தொலைநோக்கி (SUIT): இது சூரியன்னை 200-400 nm அலைநீள நெடுக்கத்தில் நோக்கீடுகள் எடுக்கும். மேலும், 11 வடிப்பிகளைப் பயன்படுத்திச் சூரிய வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளின் முழு வட்டு படிமங்களைப் படம்பிடிக்கும். சூரியன் இதுவரை இவ்வளவு அலைநீள நெடுக்கத்தில் நோக்கீடு எடுக்க்கப்பட்டதில்லை. விண்கலம் முதல் இலாகிரேஞ்சுப் புள்ளியில் உல்ளதால், இக்கருவி தடங்கல் ஏதுமின்றி சூரியனை தொடர்ந்து நோக்கிட இயலும். இது ஏ. என். இராம்பிரகாசாலும் துர்கேசு திரிபாதியாலும் பூனாவில் உள்ள வானியல், வானியற்பியலுக்கான பல்கலைக்கழகத்திடை மையத்தால்(IUCAA), இசுரோ, அதன் பிற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது. இதன் எடை 35 kg (77 lb) அளவுக்கு அணுக்கமாக அமையும்.[20]
  • ஆதித்தியா சூரியக் காற்றுத் துகள் செய்முறை (ASPEX):[21] இது சூரியக் காற்றின் மாற்றம், இயல்புகள், பரவல், கதிர்நிரல் பான்மைகளை ஆய்வு செய்யும்.
  • ஆதித்தியா மின்மப் பகுப்பாய்வித் தொகுப்பு (PAPA): இது சூரியக் காற்றின் உட்கூறுகளையும் அதன் ஆற்றல் பரவலையும் ஆய்வு செய்யும்.
  • சூரியத் தாழ் ஆற்றல் X-கதிர் கதிர்நிரல்மானி (SoLEXS): சூரியப்புறணி இயங்கமைப்பையும் அதன் சூடாக்கத்தையும் ஆய்வுசெய்ய, இக்கருவி X-கதிர் சுடர்வுகளைக் கண்காணிக்கும்.
  • உயர் ஆற்றல் L1 வட்டணை X-கதிர் கதிர்நிரல்மானி (HEL1OS): சூரியப்புறணி இயங்கியல் நிகழ்வுகளைக் கண்காணிக்கவும் உமிழ்வு நிகழ்ச்சிகளின்போது உயர் ஆற்றல் சூரியத் துகள்கள் பயன்படுத்தும் ஆற்றலை மதிப்பீடு செய்யவும் இக்கருவி உதவுகிறது.
  • காந்தமானி:[22] இது கோளிடைக் காந்தப்புலத் தன்மையையும் பருமையையும் அளக்கும்.
Remove ads

திட்டச் சிறப்பும் வாய்ப்பும்

ஆதித்தியா எல் 1 திட்டம் சூரிய நடத்தையையும் புவி, விண்வெளி சூழலுடன்னன ஊடாட்டத்தையும் புரிந்துகொள்ளலைக் கணிசமான அளவில் மேம்படுத்தலை உறுதிபடுத்தும். திட்டத்தின் திட்டமிடப்பட்டுள்ள நோக்கீடுகளும் தர்வவுகளை திரட்டலும் புதிய திருப்புமுனை கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுப்பதோடு சூரிய இயற்பியல், எல்லிய இயற்பியல் புலங்களில் புதிய பார்வைகளைத் திறந்து வைக்கும்.

  1. சூரியப்புறணி சூடாக்கப் பொறிமுறை அல்லது இயங்கமைப்பு:[23] சூரிய இயர்பியலின் ஒரு மையக் கேள்வி சுரியப்புறணிச் சூடாக்கச் சிக்கலாகும். ஏன் சூரியமேர்பரப்பை விட வெளி வளிமண்டலமான சூரியப்புறணி உயர் வெப்பநிலையில் உள்ளது என்பதாகும். ஆதித்தியா எல் 1 கருவிகள், குறிப்பாக சூரியப் புறவூதா படிமமாக்கத் தொலைநோக்கியும் (SUIT) கட்புல உமிழ்வரி கதிர்நிரல் வரைவியும் (VELC), சூரியப்புறணி உட்கூறுகளையும் இயங்கியலையும் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியப்புறணியின் நடத்தையை நெருக்கமாககஆய்வுசெய்து, அறிவியலாளர்கள் சூரியப்புறணி சூடாக்கத்துக்கான இயங்கமைப்புகளை விளக்கலாம்.
  2. விண்வெளி வானிலை முன்கணிப்பு:[24] புவித் தொழில்நுட்பத்தையும் அகக் கட்டமைப்பு வளங்களையும் தாக்கவல்ல விண்வெளி வானிலை நிகழ்ச்சிகளை முன்கணிக்க, சூரிய நடத்தையைப்புரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். இந்தத் திட்டத்தின் தரவுகள், சூரிய சுடர்வீச்சுகளையும் சூரிய உயர் ஆற்றல் துகள் வெளியேற்ற நிகழ்வுகளையும் சூரியப்புறணி பொருண்மை உமிழ்வுகளையும் பற்றி ஆழ்ந்த பார்வையையும் விளக்கத்தையும் தரவல்லன. இந்த பார்வைகள் விண்வெளி வானிலை நிகழ்வை முன்கணித்து, தொடர் அமைப்புகள் செயர்கைக்கோள்கள் மின்கட்டமைப்புகள் மீதான விலைவுகளைத் தவிர்க்கலாம்.
  3. சூரியக் காற்று, காந்தப் புலங்கள் ஆய்வுகள்: ஆதித்திய எல் 1 கருவிகள், குறிப்பாக ஆதித்தியா காற்றுத்துகௐ செய்முறையும் (ASPEX) காந்தமானிகளும் சூரியக் காற்ரின் இயல்புகளையும் கோளிடைத் தடவழிக் காந்தப்புலங்களையும் பற்றியத் துல்லியமான எளிய புரிதலை ஏற்படுத்தலாம்.
  4. புவியின் காலநிலையைப் புரிந்து கொள்ளல்:சூரியனின் செயல்பாடு புவிக் காலநிலையை நெடுங்கால அளவில் தாக்கும்.ஆதித்தியா எல் 1 இன் பவியண்மைப் புறவூதக் கதிர்வீச்சும், புவியின் மேல் வளிமன்டலத்தில் அதன் தாக்கமும் சார்ந்த நோக்கீடுகள், சூரிய மாறுபடுதிறம் புவியின் காலநிலை பாணிகளை தாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்மிது காலநிலை ஆய்வாளர்களுக்கு இயர்கை நிகழ்வுகளும் மாந்தச் செய்லாக்க நிகழ்வும் காலநிலை மாற்றத்தை முடுக்குகின்றன என்பதினை மதிப்பிடுவதற்கான மதிப்புமிக்க தரவுகளைத் தரும்.
  5. எளிய சூரிய வளிமண்டல படிமமாக்கம்: ஆதித்தியா எல் 1 விண்கலக் கருவித் தொகுதிகள் சூரிய வளிமண்டலத்தின் ஒளிக்கோலத்தில் இருந்து சூரியப்புறனி வரையிலான பல்வேறு அலைநீள நோக்கீடுகளைத் தரும் இந்த ஒருங்கியைந்த் நோக்கீடுகள் சூரிய ந்டத்தையை ஆலும் சிக்கலான செயல்முறைகளைப் பற்றிய பர்வைகளைத் தந்து, சூரிய வளிமண்டல அடுக்குகளிடையே நிகழும் பொருள், ஆற்றலின் பாய்வின் சுவடுகளை அறிய வழிவகுக்கும்.
  6. சூரியப்புறணி பொருண்மை உமிழ்வுகளின் (CMEs) தோற்றத்தையும் இயங்கியலையும் புரிதல்: சூரியப்புறணி பொருண்மை உமிழ்வுகள் ஆற்றல் மிக்க, பேரழிவுகளை விலைவிக்கும் சூரிய நிகழ்வுகளாகும்மாதித்தியா எல் 1 நோக்கீடுகள் இவை எப்படி தொடங்கி படிமலர்கின்றன என அறிவது, அவற்றின் தோற்றத்தையும் நடத்தையையும் பற்றிப் புரிந்துகொண்டு புதுப் படிமங்களை உருவாக்கி மேம்பட்ட முறையில் அவற்றின் உருவாக்கத்தையும் விளைவுகளையும் முன்கணித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க உதவும்.
Remove ads

ஏவுதல்

Thumb
PSLV-C57 ஏவூர்தியின் பறத்தல் வரிசைமுறை

2023 செப்டம்பர் 2 அன்று 11:50 மணி (இசீநே) அளவில், முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV-C57) வழி, சிறீ அரிகோட்டாவில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி ஆய்வு மையம் (SDSC) இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஆதித்தியா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[3][4][6][25]

ஏவுநாள் காலையில், ஏவிடத்துக்கு அருகில் அமைந்த காட்சி அரங்கில் பல ஆயிரம் மக்கள் ஏவூர்தி சீறி விண்ணில் பாய்வதைப் பார்க்க குழுமிவிட்டனர், அதேவேளையில் ஒருங்கே , தேசியத் தொலைக்காட்சியிலும் ஏவுதல் பரப்புரையாளர்களின் விவரிப்போடு ஒளிபரப்பப்பட்டது.[4]

ஆதித்தியா எல் 1 விண்கலம்,63 மணித்துளிகள், 20 நொடிகள் பரந்த பிறகு, 12:54 மணி (IST) அளவில் புவி சுற்றும் நீள்வட்ட வட்டணையில் வெற்றிகரமாக நுழைவிக்கப்பட்டது. இந்த வட்டணையின் அளவுகள் 235x19500 கிமீ ஆகும்.

ஆதித்தியா எல் 1 விண்கலம் L1 இலாகிரேஞ்சியப் புள்ளி வட்டணையில் மாற்றி வைப்பதற்கு முன்பு நான்கு புவி ஈர்ப்பு வட்டணைகளில் சுற்றிவரும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஏவிய பிறகு, ஆதித்தியா எல் 1 விண்கலம் தன் வரையறுத்த L1 இலாகிரேஞ்சியப் புள்ளி வட்டணையை அடைவதற்கு முன் தோராயமாக 127 நாட்கள் விண்ணில் L1 நோக்கிப் பயணம் செய்யும்.[26]

Remove ads

வட்டணை உயர்த்தல்

முதல் வட்டணை உயர்த்தல்

ஆதித்தியா எல் 1 விண்கலம் 2023, செப்டம்பர் 3 அன்று முதல் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 245 km (152 mi) க்கு 22,459 km (13,955 mi) ஆக உயர்த்தியது.[27]

இரண்டாம் வட்டணை உயர்த்தல்

ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 5 அன்று இரண்டாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 282 km (175 mi) க்கு 40,225 km (24,995 mi) ஆக உயர்த்தியது.

மூன்றாம் வட்டணை உயர்த்தல்

ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 10 அன்று மூன்றாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 296 km (184 mi) into 71,767 km (44,594 mi) ஆக உயர்த்தியது.

நான்காம் வட்டணை உயர்த்தல்

ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 15 அன்று நான்காம் மூன்றாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 256 km (159 mi) by 121,973 km (75,791 mi) ஆக உயர்த்தியது.

இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் தடவழியில் நுழைத்தல்

ஆதித்தியா-L1 2023, செப்டம்பர் 19 அன்று புவி வட்டணையை விட்டு வெளியேறி, இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் தடவழியில் நுழையும் இறுதி நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி அப்புள்ளியை நோக்கிப் பரந்துள்ளது. இது 1.5 மில்லியன் கிமீ தொலவில் உள்ள தன் அறுதி இலக்கிடத்தை அடைய குறைந்தது நான்கு மாதங்கள் பிடிக்கும்.

ஆதித்தியAditya-L1 2023, செபுதம்பர் 30 அன்று புவு ஆட்ப்பாட்டுக் கோளத்திலிருந்து விடுபட்டு, இலாகிரேஞ்சியப் புள்லி 1 நோக்கிய தடவழியில் நுழைந்துவிட்டது.[28]

தடவழித் திருத்த நடவடிக்கை

ஆதித்தியா L 1 2023, அக்தோபர் 6 அன்று தடவழித் திருத்தை(TCM) மேற்கொண்டது. இது 2023 செபுதம்பர் 19 இல் இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் நுழைவை(TL1I) நிகழ்த்திய பிறகான தடவழி இயக்கத்தை மதிப்பிட்டதில், தடவழித் திருத்தம் தேவையாகியதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.[28]

மேலதிகத் தகவல்கள் கட்டமும் செயல்வரிசையும், நாள்/நேரம் ...
ஆதித்தியா L 1 அசைவூட்டம்
Thumb
புவியைச் சுற்றி
Thumb
L 1 புள்ளியைச் சுற்றி - சட்டகம் புவியுடன் சுற்றிவருகிறது
       ஆதித்தியா L 1 ·        புவி ·        L 1 புள்ளி
Remove ads

பணிக்குழு

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads