ஆத்மியா ராஜன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆத்மியா ராஜன், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகையாவார். பெரும்பாலும்மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.
தனி வாழ்க்கை
ஆத்மியா, 23 டிசம்பர் 1989 அன்று கேரளாவின் கண்ணூரில் பெற்றோர்களான கே.வி.ராஜன் (தந்தை) மற்றும் பத்மினி ராஜன் (தாய்) ஆகியோருக்குப் பிறந்துள்ளார். மங்களூரில் உள்ள ஸ்ரீ தேவி நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், சனூப் கே நம்பியாரை 25 ஜனவரி 2021 அன்று கண்ணூரில் திருமணம் செய்துள்ளார்.[2]
தொழில்
2009 ஆம் ஆண்டு வெள்ளத்தூவல் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஆத்மியா. இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் தமிழ்த் திரைப்படமான மனம் கொத்தி பறவையில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக கிராமத்து பெண்வேடத்தில் நடித்துள்ளார். அதன் பின்னரே மலையாளத்தில் கதாநாயகியாக ரஞ்சன் பிரமோத்தின் ரோஸ் கிடாரினாலில் நடித்துள்ளார், இப்படத்தில், அவர் விமான பயிற்சியாளரின் பாத்திரத்தில், இரண்டு காதலர்களுக்கு இடையில் சிக்கிய அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார்.[3] 2014 ஆம் ஆண்டில், போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்திலும், 2016 ஆம் ஆண்டில் அமீபா படத்திலும் நடித்துள்ளார் [4][5][6] ஜோசப் (2018) மற்றும் மார்கோனி மாத்தாய் (2019) போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்.[7]
Remove ads
திரைப்படவியல்
![]() |
இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads