ஆந்தை

ஆந்தை, ஸ்ட்றைஜிபோர்மெஸ் order ஐச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக From Wikipedia, the free encyclopedia

ஆந்தை
Remove ads

ஆந்தை,(ஒலிப்பு) ஸ்ட்றைஜிபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 200 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.

விரைவான உண்மைகள் ஆந்தை புதைப்படிவ காலம்:Late Paleocene to recent, உயிரியல் வகைப்பாடு ...

ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.

ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாது. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.

பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial diskகள், கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.

அவற்றின் தோற்ற ஒற்றுமைக்குப் புறம்பாக, இவை, பாறுகள் மற்றும் ஏனைய இரவிற் திரியும் ஊனுண்ணிகளைவிட, whippoorwills மற்றும் ஏனைய பக்கிகள் அல்லது கேப்ரிமுல்கிபார்மஸ் என்பவற்றுக்கு நெருங்கிய உறவுள்ளவை. சில taxonomists, nightjarகளையும் ஆந்தையிருக்கும் அதே order இலேயே சேர்த்துள்ளார்கள். (Sibley-Ahlquist taxonomy ஐப் பார்க்கவும்).

ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும், உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள், செதில்கள், மற்றும் இறகுகள் போன்றவற்றை, உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை, இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது. உயிரியல் பாடங்களின்போது பகுத்தாய்வதற்கு மாணவர்களுக்கு உதவுவதால், சில நிறுவனங்கள், இந்த உருண்டைகளைச் சேகரித்துப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்கின்றன.

ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்ட கோளவடிவம் கொண்டவை. ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும்.

Remove ads

பழங்கதைகளும், கிராமியக் கதைகளும்

இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல், பயத்துக்குரியதாகவும், கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.

காகங்களும் வேறு பல பறவைகளும் அதிக புத்திக்கூர்மையுள்ளவையாக இருந்தும், ஆந்தைகள், பாரம்பரியமாகப் புத்திக்கூர்மையுடனும், ஆதெனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது. பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் "ம்" ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும், ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க, அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில், ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன், இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில், இவை அழுக்கானவையாகவும், கஷ்டத்தைக் கொண்டுவருபவையாகவும் கருதப்பட்டன. 2003ல் அமெரிக்கப் பாடசாலைகளில் புழக்கத்திலுள்ள, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் உள்ளீடுகளை, பல் பண்பாட்டு உணர்வுகளின் அடிப்படையில் மீளாய்வு செய்தபோது, பாம்புகள், தேள்கள் போன்ற பயத்தைக் கொடுக்கும் விலங்குகளுடன், ஆந்தைகளைப் பற்றிய கதைகள், கேள்விகளுக்கான உரைப்பகுதிகள் போன்றவற்றையும் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டது. தென்மேற்கு அமெரிக்க இந்தியப் பண்பாட்டைச் சேர்ந்த மாணவர்களை, ஆந்தை பற்றிய கேள்விகள் பயமுறுத்திப் பரீட்சையிலிருந்து திசைதிருப்பக் கூடுமென்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டதாம்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads