ஆன் அரசமரபு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆன் அரசமரபு (The Han Dynasty) கிமு 206 தொடக்கம் கி.பி. 220 வரை 426 ஆண்டுகள் சீனாவில் நிலவிய ஒரு அரசமரபு ஆகும். இது கின் அரசமரபைத் தொடர்ந்தும், மூன்று இராச்சியங்களுக்கு முற்பட்டும் நிலை பெற்றிருந்தது. இந்த அரச மரபினர் புகழ் பெற்ற லியூ (Liu) என்னும் இனக்குழுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஆண்ட காலம் சீன வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகின்றது. சீனாவின் பெரும்பான்மைச் சமூகத்தினர் இன்றும் தம்மை ஆன் மக்கள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஆன் அரசமரபினர் காலத்தில், சீனா அதிகாரபூர்வமாகக் கன்பூசிய மதத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டது. இக்காலத்தில் சீனா, வேளாண்மை, கைப்பணி, வணிகம் ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்திருந்ததுடன், மக்கள்தொகையும் ஐந்தரைக் கோடியைத் தாண்டியிருந்தது. அதே வேளை ஆன் பேரரசு, தனது அரசியல், பண்பாட்டுச் செல்வாக்கைக் கொரியா, மங்கோலியா, வியட்நாம், ஜப்பான், மத்திய ஆசியா முதலிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. இது பின்னர் உள் நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகக் குலைந்து போயிற்று.
ஆன் அரசமரபை இரண்டு பிரிவுகளாக அடையாளம் காண்பது உண்டு. முதலாவது, முந்திய ஆன் அரசமரபு அல்லது மேற்கத்திய ஆன் அரசமரபு என்றும், மற்றது பிந்திய ஆன் அரசமரபு அல்லது கிழக்கத்திய ஆன் அரசமரபு என்றும் அழைக்கப்படுகிறது. முந்திய ஆன் அரசமரபு, கி.மு 206 தொடக்கம் கிபி 24 வரையும் சாங்கானில் இருந்து ஆண்டு வந்தது. அடுத்தது, கி.பி 25 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 220 வரை லுவோயாங்கிலும் இருந்தது.
Remove ads
ஆன் பேரரசில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி
ஆன் பேரரசில் நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு எளியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. ஏற்கனவே சிறந்திருந்த சீனப் பட்டுத்தொழில் மேலும் சிறப்புற்றது. கி.மு. 190ல் ஊயி (Hui) பேரரசனால் தொலைநோக்குப் பார்வையில் பட்டுப்பாதை உருவாக்கப்பட்டது. இதனால் சீனா, இந்தியா, இன்னும் சில ஆசிய நாடுகள், ஐரோப்பா போன்றவை மிகப்பயனடைந்தன. அரசப்பதவிகளுக்கு நாடளாவிய தேர்வுகளும் கல்வி நாட்டுடைமையும் ஆக்கப்பட்டது.[3] இன்னும் பல வளர்ச்சித் திட்டங்கள் அடிப்படை தேவைகளையும் ஆடம்பர ஆசைகளையும் நிறைவு செய்ததால் ஆன் பேரரசு காலம் சீனாவின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது.[4]
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads