காம்போஜர்கள்
கிழக்கு ஆப்கானிஸ்தானத்தில் உள்ள காம்போஜ நாட்டினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காம்போஜர்கள் (Kambojas) எனும் இனக் குழுக்கள் குறித்து இந்தியாவின் இரும்புக் காலத்தவர்கள் என பண்டைய சமசுகிருதம் மற்றும் பாளி இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளது. காம்போஜர்கள் ஆண்ட காம்போஜம் எனும் நாடு, காந்தாரதேசத்திற்கு அருகே அமைந்தது. காம்போஜம் 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும்.



பண்டைய இந்தியாவின் வடமேற்கு பகுதியின் தற்கால கிழக்கு ஆப்கானிஸ்தானத்தில் உள்ள காம்போஜ நாட்டினர் குதிரை வளர்ப்புக் கலையிலும்; குதிரையேற்றப் பயிற்சியிலும் வல்லவர்கள். [1][2]அஸ்வம் எனும் குதிரையை காம்போஜர்கள் பேணியதால், பண்டைய காம்போஜர்களை அஸ்வகர்கள் என அழைத்தனர். போர்களில் காம்போஜர்களின் குதிரைப்படை திறம்பட செயல்பட்டது.
Remove ads
வரலாறு
பண்டைய காம்போஜர்கள் இந்தோ-ஈரானிய இனக்குழுக்கள் ஆவர். "கி பி முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவை கைப்பற்றிய இந்தோ-ஈரானியர்களான சசானியர்கள் மற்றும் பார்த்தியர்களின் வழித்தோண்றல்களே காம்போஜர்கள் ஆவார்" இவர்கள் ஆண்ட நாட்டை காம்போஜம் என்பர்.
சில வரலாற்று ஆய்வாளர்கள் காம்போஜர்களை இந்தோ-ஆரியர்கள் எனக் குறிப்பர்.[3][4][5] [6][7][8] சகர் அரச மரபிலிருந்து தோண்றியவர்களே காம்போஜர்கள் எனக் கூறுகின்றனர்.[9]
Remove ads
காம்போஜர்கள் ஆண்ட பகுதிகள்
பௌத்த நூல்கள், காம்போஜம், 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாக கூறுகிறது.[10]
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் எனும் நூல் மற்றும் அசோகரின் கல்வெட்டு எண் XIII-இல் காம்போஜம் ஒரு குடியரசு நாடு எனக் குறித்துள்ளது. பாணினியின் செய்யுட்களில் காம்போஜம், ஒரு சத்திரிய முடியாட்சி நாடு எனிலும், அமைச்சரவையின் அறிவுரைகளின் படி ஆட்சி செய்யும் மன்னனை கொண்டது என்று கூறுகிறது. [11]
காம்போஜர் - அலெக்சாண்டர் பிணக்கு
அலெக்சாண்டர் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசை வென்ற பின், வட இந்தியாவின் பஞ்சாபை ஆண்டு வந்த மன்னர் போரசை வெற்றி கொள்ள, ஆப்கானிஸ்தானத்தை கடந்து வரும் வழியில் காம்போஜர்களுக்கும், அலெக்சாண்டரின் படையினருக்கும் பிணக்கு உண்டானது.[12][13]
இந்தியாவில் குடியேற்றம்
கி மு இரண்டாம் மற்றும் முதல் நூற்றாண்டுகளில் காம்போஜர்கள், வடக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து, சகர்கள் மற்றும் யவனர்களுடன், பண்டைய இந்தியாவின் சிந்து, சௌராஷ்டிரம், மால்வா, இராஜஸ்தான், பஞ்சாப், சூரசேனம் போன்ற பகுதிகளில் நிரந்தரமாக குடியேறி, தென்மேற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் தன்னாட்சி மிக்க நாடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வினத்தின் வழித்தோண்றல் பின்னர் கௌடப் பேரரசு, பாலப் பேரரசுகளை வென்று, வங்காளத்தில் காம்போஜ-பாலப் பேரரசை நிறுவினர்.[14][15][16] இறுதி காம்போஜ-பாலப் பேரரசு முதலாம் இராசேந்திர சோழானால் 11-ஆம் நூற்றாண்டில் வெல்லப்பட்டது.[17][18]
Remove ads
இதிகாசக் குறிப்புகள்
மகாபாரத இதிகாசத்தில் சகர்கள், யவனர்கள் மற்றும் பகலவர்களை, வடமேற்கிலிருந்து, பரத கண்டத்தில் குடியேறியவர்கள் எனக் குறித்துள்ளது.[5][19][20][21] [22]
மௌரியப் பேரரசில்
கி மு மூன்றாம் நூற்றாண்டு அசோகரது கல்வெட்டுகளில் காம்போஜர்கள், மௌரியப் பேரரசில் தன்னாட்சியுன் ஆட்சிபுரிந்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.[5][23]
அசோகரது கல்வெட்டு எண் V -இல் காம்போஜம், காந்தாரம் போன்ற மகாஜனபதங்களைக் குறித்துள்ளது.
காம்போஜர்களை பௌத்த சமயத்திற்கு மதம் மாற்ற பௌத்த பிக்குகளை அனுப்பி வைத்தார் என்பதை அசோகரது கல்வெட்டு எண் ஐந்திலிருந்து தெரியவருகிறது.[24][25][26]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆதார நூல் பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads