ஆயுத பூஜை (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயுத பூஜை (Ayudha Poojai) 1995 ஆம் ஆண்டு அர்ஜுன், ஊர்வசி மற்றும் ரோஜா நடிப்பில், சி. சிவகுமார் இயக்கத்தில், என். பழனிச்சாமி தயாரிப்பில், வித்தியாசாகர் இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம்[1][2].
Remove ads
கதைச்சுருக்கம்
கிருஷ்ணசாமியும் (அர்ஜுன்) சாமியப்பனும் (திலகன்) எதிரிகள். கிருஷ்ணசாமியின் மகள் அமுதா (நிகிதா) தன் தந்தை ஒரு கொலைகாரன் என்றெண்ணி அவரை வெறுக்கிறாள்.
கிருஷ்ணசாமியின் கடந்த காலம்: கிருஷ்ணசாமி தன் நண்பன் கந்தசாமியுடன் தேநீர் கடை நடத்துகிறான். கிருஷ்ணசாமி காதலிக்கும் பெண்ணான சிந்தாமணியுடன் (ரோஜா) நடக்கவிருந்த நிச்சயதார்த்தை தடுக்கிறான் சாமியப்பன். சிந்தாமணியின் தந்தை சாமியப்பனின் மகனுக்கு (ராஜா) திருமணம் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்ததாகக் கூறுகிறான் சாமியப்பன். கிருஷ்ணசாமி ஒரு அரசியல் நிகழ்ச்சியில் சாமியப்பனை அவமானப்படுத்துகிறான். ஆத்திரம் கொள்ளும் சாமியப்பன், கிருஷ்ணசாமியின் சகோதரனைக் கொல்கிறான். இதற்கு பழிவாங்க சாமியப்பனின் வீட்டுக்குச் செல்லும் கிருஷ்ணசாமியைக் கைது செய்து அவன் கொலை செய்யாமல் தடுக்கும் காவல்துறை அதிகாரி (நாகேஷ்) அவனுக்கு சாமியப்பனின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பொறுப்பைத் தருகிறார்.
சாமியப்பன் சட்டவிரோதமாக வைத்துள்ள பணத்தைக் கைப்பற்றும் கிருஷ்ணசாமி பணக்காரனாக மாறுகிறான். காவல் அதிகாரியை அடிக்கும் சாமியப்பனின் வலது கையை வெட்டுகிறான். சிந்தாமணிக்கும் சாமியப்பனின் மகனுக்கும் திருமணம் நடக்கிறது. வசந்தா (ஊர்வசி) கிருஷ்ணசாமியைக் காதலிக்கிறாள். முதலில் திருமணத்திற்கு மறுக்கும் கிருஷ்ணசாமி, அவன் தாயின் வற்புறுத்தலால் அவளைத் திருமணம் செய்கிறான். கிருஷ்ணசாமியின் வன்முறை நடவடிக்கைகள் பிடிக்காமல் கர்ப்பிணியான வசந்தா வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
இறுதியில் கிருஷ்ணசாமி - சாமியப்பன் இருவரில் வெற்றி பெற்றது யார்? என்பது மீதிக்கதை.
Remove ads
நடிகர்கள்
இசை
படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர். பாடலாசிரியர்கள் வாலி மற்றும் இலக்கியன்[3][4].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads