ஆராக்கேரியா

தாவரப் பேரினம் From Wikipedia, the free encyclopedia

ஆராக்கேரியா
Remove ads

ஆராக்கேரியா (தாவரவியில் வகைப்பாடு:Araucaria) [2] என்பது அரௌகாரியாசியே குடும்பத்தைச் சேர்ந்த மாறாப் பசுமையான ஊசியிலை மரங்களில் ஒரு பேரினமாகும் .  நியூ கலிடோனியாவில் தற்போது 20 இனங்கள் உள்ளன (இதில் 14  உள்ளூர் இனங்கள், பார்க்க நியூ கலிடோனியன் அரௌகாரியா ), நோர்போக் தீவு, கிழக்கு ஆத்திரேலியா, நியூ கினி, கிழக்கு அர்கெந்தீனா, தெற்கு பிரேசில், சிலி, பரகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. தென் பசிபிக் பிராந்தியத்திலும் கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் இவை பொதுவாக காணப்படுகின்றன.

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, மாதிரி இனம் ...
Remove ads

விளக்கம்

Thumb
விதைக் கூம்புகளுடன் கூடிய அரௌகாரியா அரௌசனா

ஆராக்கேரியா முக்கியமாக பெரிய மரங்களாகும். இவற்றின் அடிமரம் பெரியதாக நிமிர்ந்து தண்டுபோன்று உயர்ந்து இருக்கும். இவை 5–80 மீட்டர்கள் (16–262 அடி) உயரம் வரை எட்டும். அடுக்கடுக்காகக் கிளைகளை வட்டவொழுங்கில் கிடைமட்டமாகச் சமமாக எல்லாத் திக்குகளிலும் விட்டுக்கொண்டு, கோபுரம் போலவும் தேர்போலவும் இம்மரங்கள் கம்பீரமாக உயர்ந்து அழகாக நிற்கும். மேலும் இவை தோல் அல்லது ஊசி போன்ற இலைகளாலைக் கொண்டதாக இருக்கும். சில இனங்களில், இலைகள் குறுகலானவை, தமரூசி வடிவ மற்றும் ஈட்டி வடிவிலானவை, அரிதாகவே ஒன்றுடன் ஒன்று இணைகின்றன; மற்றவற்றில் இவை பரந்தவையாகும் தட்டையானவையாகவும் இருக்கின்றன.[3]

சிலி நாட்டு ஆராக்கா மாவட்டத்தில் முதன்முதல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. சிலி நாட்டுக்குரிய குரங்குச் சிக்கல் (Mcnkey Puzzle) என்னும் ஆராக்கேரியா இம்பிரிக் கேட்டாவின் விதைகள் உண்ணதக்கது. இவை பிரேசில் பைன் தென் பிரேசில் நாட்டில் ஏராளமாக இருக்கிறது. இந்த விதைகளை தென்-மத்திய சிலி மற்றும் தென்-மேற்கு அர்கெந்தீனாவில் வாழும் பழங்குடியினரான மாப்புச்சிகள் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். மாப்புச்சே மக்கள் இதை pehuén என்று அழைக்கிறார்கள். மேலும் இதை புனிதமாக கருதுகின்றனர்.[3] ஆண்டிசில் வசிக்கும் சில மாபூச்சேகள் தங்கள் பாரம்பரிய உணவுக்காக இதன் விதைகளை அதிக அளவில் அறுவடை செய்வதால், தங்களை பெஹுயென்சே ("பெஹுயென் மக்கள்") என்று அழைத்துக் கொள்கின்றனர்.[4][5]

Remove ads

பரவல்

அர்ஜென்டினா, பிரேசில், நியூ கலிடோனியா, நோர்போக் தீவு, ஆஸ்திரேலியா, நியூ கினியா, சிலி மற்றும் பப்புவா (இந்தோனேசியா) ஆகிய நாடுகளில் அரௌகாரியாவின் உறுப்பினர்கள் காணப்படுகின்றன.[6]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads